Monday, April 12, 2021

புதையல் வேட்டைகாரனாக அசத்த வரும் யோகிபாபு!

நடிகர் யோகிபாபு ஒரு புதிய படத்தில் புதையல் வேட்டைக்காரராக நடிக்கவுள்ளார். ஜோதிகா நடிப்பில் வெளியான ராட்சசி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் கவுதம் ராஜ்....

Movie Stills

ஆக்ஷனில் கலக்கியுள்ள ஹர்பஜன் சிங்… ‘பிரண்ட்ஷிப்’ டீசர் வெளியானது…

பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் – பிக்பாஸ் நடிகை லாஸ்லியா இணைந்து நடித்துள்ள ‘பிரண்ட்ஷிப்’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

இயக்குனர்கள் ஜே.பி.ஆர் & ஷாம் சூர்யா ஆகியோர் இணைந்து இயக்கியுள்ள படம் ‘பிரண்ட்ஷிப்’. பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ள இந்த படத்தில் பிக்பாஸ் நடிகை லாஸ்லியா ஹீரோயினாக நடித்துள்ளார். ஆக்ஷ்ன் கிங் அர்ஜுன் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள இப்படத்தில் ஷேண்டோ ஸ்டுடியோ & சினிமாஸ் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ளது. மேலும் இந்த படத்தில் சதிஷ் , ஜெ.எஸ்.கே.சதீஷ்குமார், வெங்கட் சுபா ஆகியோர் நடித்துள்ளனர்.

புதுமுக இசையமைப்பாளர் உதயகுமார் இசையமைத்துள்ள இந்த படத்தில் நடிகர் சிம்பு ஒரு பாடலை பாடியுள்ளார். கல்லூரி மாணவராக ஹர்பஜன் சிங் நடித்துள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் முடிந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் ‘பிரண்ட்ஷிப்’ படத்தின் டீசர் இன்று வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்து. அதன்படி இந்த படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது. இந்த டீசர் தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளில் வெளியாகி பட்டையை கிளப்பியுள்ளது. அதிரடி ஆக்ஷனில் ஹர்பஜன் சிங் சண்டையிடும் காட்சிகள் தூள் பறக்கிறது. இதையடுத்து ஹர்பஜன் சிங் – லாஸ்லியாவின் காட்சிகள் கலர்புல்லாக காட்டப்பட்டிருக்கிறது. இந்த படம் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Latest Posts

புதையல் வேட்டைகாரனாக அசத்த வரும் யோகிபாபு!

நடிகர் யோகிபாபு ஒரு புதிய படத்தில் புதையல் வேட்டைக்காரராக நடிக்கவுள்ளார். ஜோதிகா நடிப்பில் வெளியான ராட்சசி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் கவுதம் ராஜ்....

வெற்றிமாறன்-சூரி படத்தின் புதிய அப்டேட்..

வெற்றிமாறன் - நடிகர் சூரி கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. இயக்குனர் வெற்றிமாறன்...

போலீஸ் அதிகாரியாக மிரட்டும் வரும் உதயநிதி…படத்தின் ஷூட்டிங் தொடங்கியது…

உதயநிதி நடிக்கும் புதிய படத்தின் ஷூட்டிங் தொடங்கியுள்ளது. இந்தியில் கடந்த 2019ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றிப்பெற்ற திரைப்படம்...

அமெரிக்காவில் ஹவுஸ்புல்லான திரையரங்கம்.. ‘கர்ணன்’ படத்தை குடும்பத்துடன்‌ பார்த்த தனுஷ் மகிழ்ச்சி!…

கர்ணன் படத்தை நடிகர் தனுஷ் தனது குடும்பத்துடன் அமெரிக்கா திரையரங்கு ஒன்றில் பார்த்துள்ளார். தனுஷின் நடிப்பில் வெளியான ...

Actress

TTN Cinema