Tuesday, April 13, 2021

பிரசாந்த் படத்தில் இணைந்த மாஸ்டர் பட குட்டி நட்சத்திரம்!

குழந்தை நட்சத்திரம் பூவையார் கபீஷ் பிரசாந்த் நடித்து வரும் அந்தகன் படத்தில் இணைந்துள்ளார். பிரசாந்த் தற்போது தனது அப்பா தியாகராஜன் இயக்கத்தில் அந்தகன் படத்தில்...

Movie Stills

தல அஜித்தின் ‘விஸ்வாசம்’ ஷூட்டிங் நிறைவு!

தல அஜித் நடித்துள்ள ‘விஸ்வாசம்’ படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

சென்னை: தல அஜித் நடித்துள்ள ‘விஸ்வாசம்’ படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

‘வீரம்’, ‘வேதாளம்’, ‘விவேகம்’, திரைப்படங்களின் வெற்றியைத் தொடர்ந்து 4வது முறையாக இயக்குநர் சிறுத்தை சிவா, அஜித் கூட்டணியில் ‘விஸ்வாசம்’ திரைப்படம் உருவாகிறது. இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துள்ளார்.

ஹைதராபாத் ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டியில் செட் அமைத்து நடைபெற்று வந்த ’விஸ்வாசம்’ படத்தின் ஷூட்டிங் இன்றுடன் நிறைவடைந்ததாக படக்குழு தெரிவித்துள்ளது. இறுதியாக ஒரு பாடல் காட்சி புனேவில் படமாக்கப்பட்ட நிலையில் ஷூட்டிங் நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அஜித் இரட்டை வேடத்தில் நடிக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்கள் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் தம்பி ராமையா, யோகிபாபு, ரோபோ ஷங்கர், விவேக், ரமேஷ் திலக், கோவை சரளா உள்ளிட்ட ஏராளமானோர் நடித்துள்ளனர். இப்படத்தை பொங்கல் பண்டிகைக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

Latest Posts

பிரசாந்த் படத்தில் இணைந்த மாஸ்டர் பட குட்டி நட்சத்திரம்!

குழந்தை நட்சத்திரம் பூவையார் கபீஷ் பிரசாந்த் நடித்து வரும் அந்தகன் படத்தில் இணைந்துள்ளார். பிரசாந்த் தற்போது தனது அப்பா தியாகராஜன் இயக்கத்தில் அந்தகன் படத்தில்...

பொன்னியின் செல்வன் படத்தால் விக்ரம் மீது கடுப்பான மணிரத்னம்!?

பொன்னியின் செல்வன் படம் குறித்து இயக்குனர் மணிரத்னம் விக்ரம் மீது அதிருப்தியில் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். மணிரத்னம் தற்போது பொன்னியின் செல்வன் படத்தை பிரம்மாண்ட பட்ஜெட்டில்...

ஜெயலலிதாவை அடுத்து கண்ணகியாக நடிக்கும் கங்கனா ரணாவத்!

நடிகை கங்கனா, இயக்குனர் ஏஎல் விஜய் இயக்கத்தில் உருவாக உருவாக இருக்கும் புதிய படத்தில் கண்ணகி கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. கங்கனா தற்போது...

புதிய படத்தில் வக்கீலாக நடிக்கும் சூர்யா… வைரலாகும் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்!

சூர்யா புதிய படமொன்றில் வழக்கறிஞராக நடித்து வரும் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. சூர்யா தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்திற்காக...

Actress

TTN Cinema