பாலிவுட் நடிகர் சோனு சூட் கொரோனா காலத்தில் இருந்து தொடர்ந்து மக்கள் பலருக்கு உதவி செய்து வருகிறார். நாடு முழுதும் ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்து சிக்கிக் கொண்ட புலம்பெயர் தொழிலாளர்களுக்கு அவரது சொந்த செலவில் அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தது, ஏழை விவசாயிக்கு ட்ராக்டர்,ஏழைகளுக்கு மருத்துவ உதவி என ஏராளமானஉதவி செய்து வருகிறார் சோனு.

இவரது சமூக சேவையைப் பாராட்டி சமீபத்தில் ஐ.நா அமைப்பு அவருக்கு சிறந்த மனிதநேய செயல்பாட்டாளருக்கான விருது அளித்துள்ளது.
இந்நிலையில் பீகாரில் இருந்து அர்மான் என்கிற ரசிகர் ஒருவர் ,சோனு சூட்டை நேரில் பார்ப்பதற்காக சுமார் 1600 கிமீ தூரம் அவரது மிதிவண்டியை மிதித்து கொண்டே எப்படியாவது பார்த்துவிடலாம் என கிளம்பியுள்ளார். இந்த தகவல் சோஷியல் மீடியா மூலமாக சோனு சூட்டுக்கு தெரியவந்ததையடுத்து ,சோனு சூட் அந்த ரசிகரை தொடர்புகொண்டு, கிட்டத்தட்ட 3௦௦ கிமீ பயணம் செய்துவந்த அவரை வாரணாசியிலேயே நிறுத்தி அவரது சைக்கிளுடன் சேர்த்து, விமானம் மூலம் மும்பைக்கு வரவழைக்க ஏற்பாடு செய்துள்ளார்.

அவர் மும்பை வந்ததும் ஒரு ஹோட்டலில் தங்க வைத்து சந்தித்த பின் மீண்டும் விமானம் மூலமே பீஹார் திருப்பி அனுப்ப போவதாக சோனு சூட்கூறியுள்ளார்.
சோனு சூட்டின் இந்த பெருந்த மனப்பான்மை மீண்டும் மீண்டும் அவரது ரசிகர்களை மெய்சிலிர்க்க வைக்கிறது.