Saturday, February 27, 2021

Movie Stills

பார்ட்டி மோடில் களைக்கட்டிய பிக் பாஸ் ஹவுஸ்!

பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியதையடுத்து, இந்த சீசனின் ஒட்டுமொத்த போட்டியாளர்களும் ஒன்றுக் கூடியதால் பிக் பாஸ் வீடு களைக்கட்டியுள்ளது.

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியதையடுத்து, இந்த சீசனின் ஒட்டுமொத்த போட்டியாளர்களும் ஒன்றுக் கூடியதால் பிக் பாஸ் வீடு களைக்கட்டியுள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதிப்போட்டி இன்னும் 2 தினங்களில் நடைபெறவுள்ளது. கடந்த ஜூன்.17ம் தேதி 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியை உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். ஒவ்வொரு வாரமும் போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டு தற்போது இறுதிப்போட்டிக்கு ரித்விகா, ஜனனி, விஜயலக்ஷ்மி, ஐஸ்வர்யா ஆகிய 4 பேர் தகுதிப்பெற்றுள்ளனர்.

இந்நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் இறுதிப்போட்டியாளர்களை ஊக்குவிக்கும் விதமாக ஒட்டுமொத்த பிக் பாஸ் 2 சீசன் போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டில் சங்கமித்துள்ளனர். மீண்டும் 16 பேரும் ஒரே வீட்டில் ஒன்றுக்கூடி பார்ட்டி பண்ணும் புரொமோ வீடியோ வெளியாகியுள்ளது.

இந்த புரொமோவில், எனக்கு ஓட்டு போடுடா என ஜனனி மகத்திடமும், மக்கள் மனதில் நீ ஆழம இடம்புடிச்சிட்டன்னு வைஷ்ணவி ரித்விகாவிடமும் பேசிக் கொண்டு, பிக் பாஸ் போட்டியாளர்க கொண்டாட்டமும், கும்மாளமுமாக இருக்கின்றனர்.

ஆட்டம் பாட்டம் என ஆரவாரத்துடன் பிக் பாஸ் இறுதி போட்டியை ஆர்வத்துடன் கொண்டாடி வருகின்றனர். இன்னும் 2 தினங்களில் இந்த சீசனுக்கான டைட்டில் வின்னர் யார் என்பது தெரியவரும்.

 

 

Latest Posts

”ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் ஒரு ஜார்ஜ் குட்டி இருக்கிறார்” – மோகன் லால் ட்வீட் …

ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் ஒரு ஜார்ஜ் குட்டி இருக்கிறார் என‌ நடிகர் மோகன் லால் ட்வீட் செய்துள்ளார். கடந்த...

தவறி விழுந்த ‘கண்ணழகி’ ப்ரியா வாரியர்… பதறிய ரசிகர்கள்…

ஷூட்டிங்கின்போது நடிகை ப்ரியா வாரியர் தவறி விழுந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட...

Actress

TTN Cinema