Friday, March 5, 2021

Movie Stills

ப்ரியங்கா சோப்ரா 1 லட்சம் டாலர் தருகிறார் -"நீங்க சாதனை பெண்ணுன்னா உடனே ப்ரியங்காகிட்ட போங்க"

நடிகை பிரியங்கா சோப்ரா தனது கணவர் நிக் ஜோனாஸுடன் பல தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடை அளித்த பின்னர், இப்போது சமூகத்தின் முன்னேற்றத்திற்காக உழைக்கும் நான்கு பெண்களுக்கு, 1 லட்சம் டாலர் நன்கொடை அளிப்பதாக அறிவித்துள்ளார். அவர் இதுபற்றி  ஒரு வீடியோவை சமூக ஊடகங்களில் வெளியிட்டு இதன் செயல்முறை குறித்து தனது ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டார். சாதனை பெண்கள் எந்தத் துறையிலிருந்தும் இருக்கலாம், அவர் சேவைத் துறையிலோ அல்லது பாதுகாப்புப் படையில் கூட பணியாற்றலாம் என்று அவர் வெளிப்படுத்தினார்.

இந்த கொடை பற்றி ப்ரியங்கா  ஒரு அறிக்கையில், “இந்த நெருக்கடியான நேரத்தில் தொண்டு செய்யும் பெண்களுக்கு மொத்தம் 100,000 டாலர் நன்கொடை அளிப்போம்.  அவர் சமூக  சேவைத் துறையில் இருந்தாலும், ஒரு பெரிய வணிகராகவோ அல்லது சிறு வணிகராகவோ இருந்தாலும் அவரைப்பற்றி எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நாங்கள் அவருக்கு பரிசளிக்க  விரும்புகிறோம். #TogetherWomenRise. ”

முன்னதாக, பிரியங்கா சோப்ரா மற்றும் கணவர் நிக் ஜோனாஸ் ஆகியோர் செவ்வாயன்று கொரானா பரவலை தடுக்கும்பொருட்டு பல தொண்டு நிறுவனங்களுக்கு உதவி செய்தனர் .

Latest Posts

‘வடசென்னை 2’ படம் குறித்து வெற்றிமாறன் கொடுத்துள்ள அப்டேட்!

வடசென்னை 2 எப்போது வெளியாகும் என்ற கேள்விக்கு இயக்குனர் வெற்றிமாறன் பதிலளித்துள்ளார். தனுஷ் வெற்றிமாறன் இருவரும் கூட்டணிக்கு கோலிவுட்டில் எப்போதும் பெரும் வரவேற்பு கிடைத்து...

Actress

TTN Cinema