Tuesday, April 13, 2021

புதிய படத்தில் வக்கீலாக நடிக்கும் சூர்யா… வைரலாகும் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்!

சூர்யா புதிய படமொன்றில் வழக்கறிஞராக நடித்து வரும் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. சூர்யா தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்திற்காக...

Movie Stills

விஜய் 63 அப்டேட்: தளபதியுடன் ஜோடி சேரும் லேடி சூப்பர் ஸ்டார்?

நடிகர் விஜய் நடிப்பில் இயக்குநர் அட்லீ இயக்கத்தில் உருவாகிவரும் ‘விஜய் 63’ படத்தில் நடிகை நயன்தாரா ஹீரோயினாக நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை: நடிகர் விஜய் நடிப்பில் இயக்குநர் அட்லீ இயக்கத்தில் உருவாகிவரும் ‘விஜய் 63’ படத்தில் நடிகை  நயன்தாரா ஹீரோயினாக நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

சர்கார் படத்தை அடுத்து விஜய், இயக்குநர் அட்லியுடன் 3 -வது முறையாக கூட்டணி அமைத்திருக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியாகிப் படத்தின் ஆரம்பகட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இந்தப் படம் 2019-ம் ஆண்டின் தீபாவளிக்கு வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தில் நடிகர் விவேக் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படம் தொடர்பான ஒவ்வொரு அப்டேட்டையும் ஏஜிஎஸ் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் ஏ.ஜி.எஸ் நிறுவனத்தின் செயல் அதிகாரி அர்ச்சனா கல்பாத்தி, நடிகை நயன்தாராவுக்கு  பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில், ‘பிறந்தநாள் வாழ்த்துகள் நயன்தாரா. அடுத்து வரும் புத்தாண்டு உங்களுக்கு மிகச் சிறப்பான ஆண்டாக அமையும்’  என்று பதிவிட்டுள்ளார்.

இந்தப் பார்த்த விஜய் ரசிகர்கள் ‘விஜய் 63’ படத்தில் நடிகை நயன்தாராதான் ஹீரோயினா என்ற கேள்வியை முன் வைத்து வருகின்றனர்.

Latest Posts

புதிய படத்தில் வக்கீலாக நடிக்கும் சூர்யா… வைரலாகும் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்!

சூர்யா புதிய படமொன்றில் வழக்கறிஞராக நடித்து வரும் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. சூர்யா தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்திற்காக...

பூஜா ஹெக்டேவை வேற லெவலில் ரொமான்ஸ் செய்யும் ராம் சரண்!

தெலுங்கு வருடப்பிறப்பை முன்னிட்டு சிரஞ்சீவி மற்றும் ராம் சரண் நடிப்பில் உருவாகி வரும் ஆச்சார்யா படத்திலிருந்து ஸ்பெஷல் போஸ்டர் வெளியாகியுள்ளது. தெலுங்கு வருடப் பிறப்பான...

கொரோனா பாதிப்புடன் தியேட்டர் சென்ற ரஜினியின் ரீல் மகள்!?ரசிகர்கள் ஆவேசம்!

தியேட்டர் சென்று படம் பார்த்ததால் உருவான சர்ச்சைக்கு நடிகை நிவேதா தாமஸ் பதிலளித்துள்ளார். இந்தியில் அமிதாப் பச்சன், டாப்ஸி நடிப்பில் வெளியான பிங்க் திரைப்படம்...

சூர்யாவின் ‘வாடிவாசல்’ பணிகளை தொடங்கிய ஜி.வி.பிரகாஷ்… ட்விட்டரில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு…

வெற்றிமாறன் - சூர்யா கூட்டணியில் உருவாக உள்ள ‘வாடிவாசல்’ படத்தின் இசை பணியை தொடங்கிவிட்டதாக ஜி.வி.பிரகாஷ் ட்வீட் செய்துள்ளார்.

Actress

TTN Cinema