Monday, April 12, 2021

புதையல் வேட்டைகாரனாக அசத்த வரும் யோகிபாபு!

நடிகர் யோகிபாபு ஒரு புதிய படத்தில் புதையல் வேட்டைக்காரராக நடிக்கவுள்ளார். ஜோதிகா நடிப்பில் வெளியான ராட்சசி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் கவுதம் ராஜ்....

Movie Stills

வெங்கடேஷ் நடிப்பில் தெலுங்கும் உருவாகும் திரிஷ்யம் 2… படப்பூஜையுடன் ஷூட்டிங் ஆரம்பமானது…

திரியஷ்யம் 2 படத்தின் தெலுங்கு ரீமேக் படப்பூஜை இன்று நடைபெற்றது.

மோகன் லால் – ஜீத்து ஜோசப் கூட்டணியில் கடந்த 2013-ம் ஆண்டு வெளியான படம் ‘திரிஷ்யம்’. இந்த படத்தில் மோகன் லாலுக்கு ஜோடியாக மீனா நடித்திருந்தார். உலக அளவில் பாராட்டைப்பெற்ற இப்படம் பிறமொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டு வெற்றிப்பெற்றது. இதையடுத்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் 7 ஆண்டுகளுக்கு பிறகு உருவானது. ஜீத்து ஜோசப்பே இயக்கிய இந்த படம் கடந்த மாதம் ரிலீசானது. முதல் பாகத்தை போன்று இரண்டாம் பாகமும் மாபெரும் ஹிட்டடித்தது.

தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என 4 மொழிகளில் ரீமேக் செய்யப்பட்ட திரிஷ்யம் படம் தெலுங்கிலும் ரீமேக்கானது. இதில் தெலுங்கு வெங்கடேஷ், மலையாளத்தில் ஹீரோயினாக நடித்திருந்த மீனாவே இந்த படத்திலும் நடித்திருந்தார். மலையாளத்தை போன்று தெலுங்கிலும் ஹிட்டடித்து.

இந்நிலையில் திரியஷ்யம் 2 வெற்றியை தொடர்ந்து மற்ற மொழிகளிலும் ரீமேக் செய்ய இயக்குனர் ஜீத்து ஜோசப் முடிவு செய்திருந்தார். அதன்படி தெலுங்கில் முதலில் தொடங்குவது என முடிவு செய்யப்பட்டு, அதற்கான பணிகளில் ஈடுபட்டு வந்தார் இயக்குனர். இதையடுத்து அந்த படத்திற்கான பூஜை இன்று ஹைதாரபாத்தில் நடைபெற்றது. இதில் நடிகர் வெங்கடேஷ், இயக்குனர் ஜீத்து ஜோசப் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். விரைவில் இந்த படத்தின் ஷூட்டிங் துவங்கவுள்ளது.

Latest Posts

புதையல் வேட்டைகாரனாக அசத்த வரும் யோகிபாபு!

நடிகர் யோகிபாபு ஒரு புதிய படத்தில் புதையல் வேட்டைக்காரராக நடிக்கவுள்ளார். ஜோதிகா நடிப்பில் வெளியான ராட்சசி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் கவுதம் ராஜ்....

வெற்றிமாறன்-சூரி படத்தின் புதிய அப்டேட்..

வெற்றிமாறன் - நடிகர் சூரி கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. இயக்குனர் வெற்றிமாறன்...

போலீஸ் அதிகாரியாக மிரட்டும் வரும் உதயநிதி…படத்தின் ஷூட்டிங் தொடங்கியது…

உதயநிதி நடிக்கும் புதிய படத்தின் ஷூட்டிங் தொடங்கியுள்ளது. இந்தியில் கடந்த 2019ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றிப்பெற்ற திரைப்படம்...

அமெரிக்காவில் ஹவுஸ்புல்லான திரையரங்கம்.. ‘கர்ணன்’ படத்தை குடும்பத்துடன்‌ பார்த்த தனுஷ் மகிழ்ச்சி!…

கர்ணன் படத்தை நடிகர் தனுஷ் தனது குடும்பத்துடன் அமெரிக்கா திரையரங்கு ஒன்றில் பார்த்துள்ளார். தனுஷின் நடிப்பில் வெளியான ...

Actress

TTN Cinema