Saturday, February 27, 2021

Movie Stills

வைரலாகும் சிவகார்த்திகேயனின் குழந்தை பாலியல் குறித்த வீடியோ: குவியும் பாராட்டுக்கள்!

குழந்தை பாலியல் தொல்லை குறித்து நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ’மோதி விளையாடு பாப்பா’ என்ற குறும்படத்துக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றனர்.

சென்னை: குழந்தை பாலியல் தொல்லை குறித்து நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ’மோதி விளையாடு பாப்பா’ என்ற குறும்படத்துக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் தற்போதுள்ள இளம் நடிகர்களில் குழந்தைகளின் அன்பையும், ஆதரவையும் பெற்றவர் நடிகர் சிவகார்த்திகேயன். இதனை பயன்படுத்தி, குழந்தைகளுக்கு நிகழும் பாலியல் தொல்லை குறித்தும், குட் டச்-பேட் டச் குறித்த விழிப்புணர்வு குறும்படத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார்.

பள்ளிக்கூட முற்றத்தில் மரத்தடியில் அமர்ந்திருக்கும் சிறுவர்களுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் ஆசிரியராக மாறி, பாரதியாரின் பாடலை கொண்டு பாடம் எடுக்கிறார். குழந்தைகளுக்கு உடல் ரீதியாக ஏற்படும் ஆபத்துக்கள் குறித்து எளிய முறையில் சிவகார்த்திகேயன் எடுத்துரைக்கிறார்.

குழந்தைகள் பாதுகாப்புக் கருதி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக தொண்டு நிறுவனம் ஒன்று எடுத்த இம்முயற்சியை ஊக்குவிக்கும் வகையில் சிவகார்த்திகேயன் சம்பளம் வாங்காமல் இந்த குறும்படத்தில் நடித்துக் கொடுத்ததாக கூறப்படுகிறது.

‘மோதி விளையாடு பாப்பா’ என்ற இந்த குறும்படம் நேற்று மாலை சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. சிவகார்த்திகேயனின் இத்தகைய முயற்சிக்கு பிரபலங்கள் பலரும் தங்களது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Latest Posts

”ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் ஒரு ஜார்ஜ் குட்டி இருக்கிறார்” – மோகன் லால் ட்வீட் …

ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் ஒரு ஜார்ஜ் குட்டி இருக்கிறார் என‌ நடிகர் மோகன் லால் ட்வீட் செய்துள்ளார். கடந்த...

தவறி விழுந்த ‘கண்ணழகி’ ப்ரியா வாரியர்… பதறிய ரசிகர்கள்…

ஷூட்டிங்கின்போது நடிகை ப்ரியா வாரியர் தவறி விழுந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட...

Actress

TTN Cinema