ஃபேஸ்டைம் வீடியோ காலில் ஏ.ஆர்.ரகுமானை குஷிப்படுத்திய குட்டி பாப்பா!

ஃபேஸ்டைம் வீடியோ காலில் ஏ.ஆர்.ரகுமானை குஷிப்படுத்திய குட்டி பாப்பா!

பாலிவுட் பாடகரின் மகள் தவறுதலாக ஏ.ஆர்.ரகுமானுக்கு ஃபேஸ்டைமில் வீடியோ கால் செய்து அவரை குஷிப்படுத்தியுள்ளார்.

மும்பை: பாலிவுட் பாடகரின் மகள் தவறுதலாக ஏ.ஆர்.ரகுமானுக்கு ஃபேஸ்டைமில் வீடியோ கால் செய்து அவரை குஷிப்படுத்தியுள்ளார்.

ஆஸ்கர் ஏ.ஆர்.ரகுமான் தற்போது லண்டனில் ‘2.0’ படத்தின் பின்னணி இசையில் தீவிரமாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், பாலிவுட் பாடகர் அட்னன் சமியின் ஒரு வயது மகள் மெடினா தவறுதலாக ஏ.ஆர்.ரகுமானுக்கு வீடியோ கால் செய்துள்ளார். மெடினாவின் போனை எடுத்த ஏ.ஆர்.ரகுமான் சற்று நேரம் சிரித்து பேசி விளையாடியுள்ளார்.

 
 
 

 
 
 
 
 

 
 

 
 
 

Done ….Off to Chennai soon !

A post shared by @ arrahman on

இது குறித்து அட்னன் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘போனுக்கு பாஸ்வேர்ட் போடும் நேரம் வந்துவிட்டது. என் மகள் தவறுதலாக ஏ.ஆர்.ரகுமானுக்கு வீடியோ கால் செய்துவிட்டார். அவர்கள் இருவரும் பேசியுள்ளனர். பின் லண்டனில் 2.0 பின்னணி இசை பணிகள் நடைபெறும் தனது ரெக்கார்டிங் ஸ்டூடியோவை அவளுக்கு சுற்றிக்காட்டியுள்ளார்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு பதில் ட்வீட் போட்ட ஏ.ஆர்.ரகுமான், ‘டியர் அட்னன், அவளது வீடியோ கால் என் எரிச்சலான மனநிலையை மாற்றிவிட்டது. நன்றி மெடினா. கடவுள் உங்களை ஆசிர்வதிப்பார்’ என்று ட்வீட்டியிருந்தார்.

ஏ.ஆர்.ரகுமானின் இந்த பதிலை எதிர்ப்பாராத அட்னன், ‘மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன். நீங்கள் புன்னகையுடன் இருக்க கடவுளை பிரார்த்திக்கிறேன். உங்களது விலையுயர்ந்த ஆசீர்வாதங்கள் மெடினாவுக்கு கிடைத்துள்ளது’ என்று தெரிவித்துள்ளார்.

 

 

Share this story