அஜித்தை பற்றி வெளியே தெரியாத ரகசியத்தை உடைச்சிடுவேன்… பொங்கியெழும் போனி கபூர்..!

அஜித்தை பற்றி வெளியே தெரியாத ரகசியத்தை உடைச்சிடுவேன்… பொங்கியெழும் போனி கபூர்..!

அஜித்துக்கும், போனிகபூருக்கும் இடையிலான பஞ்சாயத்து இப்போதைக்கு தீரவே தீராது போல.

நேர்கொண்ட பார்வை படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர் அந்தப் படத்தை வியாபாரம் செய்வதில் காட்டிய அணுகுமுறையும், அதன் மூலம் தான் ரசித்து நடித்த படத்துக்கு எழுந்திருக்கும் பஞ்சாயத்தும் அஜித்தை அப்செட் ஆக்கியது. ஒருவழியாக அப்படத்தை ‘ஜெமினி ஃபிலிம் சர்க்யூட்’ நிறுவனம் விநியோகிக்கும் பொறுப்பை ஏற்றுள்ளது. Ajith

இந்த நிலையில், கடந்த 29-ம் தேதியன்று, தனது தயாரிப்பில் அஜித் நடிக்கும் அடுத்த படமானது பூஜையுடன் ஆகஸ்ட் இறுதியில் துவங்கும் என்று போனிகபூர் ட்விட் செய்தார். இதில் டென்ஷனான அஜித்குமார், ‘யாரைக்கேட்டு ட்விட் பண்ணீங்க?’ என்று போனியை பொளந்தெடுத்துவிட்டார். சமாதானத்துகு தன்னை சந்திக்க வந்த போனிகபூரை சுமார் பதினேழு நிமிடங்கள் நிற்க வைத்தே விளாசி தள்ளி அஜித் அனுப்பியதாக பிரபல அரசியல் புலனாய்வு பத்திரிக்கை ஒன்று கவர் ஸ்டோரி எழுதி பரபரப்பை கிளப்பியுள்ளது. 
அஜித்தின் இந்த பிஹேவியர் போனிக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. ‘இப்ப கூட என்னால நம்மோட அடுத்த ரெண்டு பட ப்ராஜெக்டை கூலா கேன்சல் பண்ணிட முடியும். ஆனால் ஸ்ரீதேவி மேடம் மேலே நான் வெச்சிருக்கிற மரியாதைக்காக அப்படி பண்ணல’ என்று போனியை ஒரு ஸ்டைலாய் மிரட்டியிருக்கிறார் அஜித். போனி இதில் செம்ம அப்செட். Ajith

சரி ஏதோ வேகத்தில் பேசிட்டார், நிச்சயம் கூல் ஆகிடுவார்! என்று எவ்வளவோ எதிர்பார்த்தார் போனி. ஆனால் இரண்டு மூன்று நாட்களாகியும் அஜித்திடம் மாற்றமில்லை, போனும் இல்லை அட்லீஸ்ட் சமாதான தூதும் இல்லை. தன்னை திட்டிவிட்டு கோயமுத்தூரில் நடந்த துப்பாக்கி சுடும் போட்டிக்கு கிளம்பிச் சென்ற அஜித்திடமிருந்து ஒரு நட்பு மெசேஜ் கூட இல்லாமல் போனதில் போனிக்கு ஏக கடுப்பு. 

விளைவு, நேர்கொண்ட பார்வை பட டீமின் முக்கிய டெக்னீஷியன்களை அழைத்து இது பற்றிப் பேசி வருந்தியிருக்கிறார். அப்போது “என்னங்க அவரைப்பத்தி சும்மா தல தலன்னு கொண்டாடுறீங்க? மக்களெல்லாம் என்னமோ அவரை பெருசா பேசுறாங்க. அவரைப் பத்தி வெளியில தெரிஞ்ச விஷயம் ஒண்ணு, உண்மை வேறொன்னா இருக்குது. Ajith

நான் என்ன பண்ணிட்டேன்னு இப்படி தாம்தூமுன்னு பேசுறார். அக்ரீமெண்ட் படிதானே நான் போயிடிருக்கேன். தயாரிப்பாளரான நான் என்னுடைய அடுத்த படத்தைப் பத்தி இப்படி அதிகாரப்பூர்வமா அறிவிக்க எல்லா உரிமையும் இருக்குது. இதுக்குள்ளே நுழைஞ்சு ஓவரா டார்ச்சர் பண்ண இவருக்கு என்ன அதிகாரமிருக்குது?” என்று பொங்கியிருக்கிறார் போனி. 

Share this story