அடல்ட் தமிழ் படத்தில் அறிமுகமாகும் சன்னி சிஸ்டர் அவங்களும் அப்டிதானா?

அடல்ட் தமிழ் படத்தில் அறிமுகமாகும் சன்னி சிஸ்டர் அவங்களும் அப்டிதானா?

பாலிவுட்டின் கவர்ச்சி நடிகையான சன்னி லியோனின் சகோதரி மியாராய் லியோன் தமிழில் அடல்ட் காமெடி படத்தின் மூலம் அறிமுகமாகிறார்.

சென்னை: பாலிவுட்டின் கவர்ச்சி நடிகையான சன்னி லியோனின் சகோதரி மியாராய் லியோன் தமிழில் அடல்ட் காமெடி படத்தின் மூலம் அறிமுகமாகிறார்.

கனடா நாட்டைச் சேர்ந்த ஆபாச பட நடிகையான சன்னி லியோன், ஆபாச படங்களுக்கு முழுக்குப் போட்டு தனது கடின உழைப்பினால் பாலிவுட்டில் கவர்ச்சி நடிகையாக தன்னை நிலை நிறுத்திக் கொண்டார். தற்போது தமிழ்-தெலுங்கில் உருவாகி வரும் சரித்திர கால படமான ‘வீரமாதேவி’ படத்தில் நடித்து வருகிறார்.

அடல்ட் தமிழ் படத்தில் அறிமுகமாகும் சன்னி சிஸ்டர் அவங்களும் அப்டிதானா?

இந்நிலையில், அவரது தங்கையான மியாராய் லியோனி, விமல் நடித்துள்ள ‘இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு’ என்ற அடல்ட் காமெடி படத்தின் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகாகிறார். விமலுக்கு ஜோடியாக ஆஷ்னா ஸவேரி நடித்துள்ள நிலையில், மற்றொரு நாயகியாக மியாராய் நடித்துள்ளார். மியா ராயும் ஆபாசப் பட நடிகை என கூறப்படுகிறது.

ஏற்கனவே ‘இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு’ படத்தின் டிரைலர் ரிலீசாகி ரசிகர்களிடம் வரவேற்பையும் சமூக வலைத்தளங்களில் விமர்சனங்களையும் சந்தித்த நிலையில், இப்படத்தின் நடிகை ஒரு ஆபாசப் பட நடிகை என தெரியவந்துள்ளது. எனினும், அவர் நடிகை சன்னி லியோனின் தங்கை என்பதால் ரசிகர்கள் ஒரே குஷியாக உள்ளனர்

Share this story