‘அடிச்சி தூக்கு’: எல்லையில் தல அஜித்தை கொண்டாடிய ராணுவ வீரர்கள்!

‘அடிச்சி தூக்கு’: எல்லையில் தல அஜித்தை கொண்டாடிய ராணுவ வீரர்கள்!

தல அஜித் நடித்துள்ள ‘விஸ்வாசம்’ படத்தின் ‘அடிச்சி தூக்கு’ பாடலை இந்திய ராணுவ வீரர்கள் கேக் வெட்டிக் கொண்டாடிய வீடியோ வைரலாகி வருகிறது.

சென்னை: தல அஜித் நடித்துள்ள ‘விஸ்வாசம்’ படத்தின் ‘அடிச்சி தூக்கு’ பாடலை இந்திய ராணுவ வீரர்கள் கேக் வெட்டிக் கொண்டாடிய வீடியோ வைரலாகி வருகிறது.

4வது முறையாக தல அஜித்-சிவா கூட்டணியில் உருவாகியிருக்கும் ‘விஸ்வாசம்’ திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீசாகிறது. முதன் முறையாக கிராமிய பின்னணியில் நடிக்கும் அஜித், மதுரையின் காவல் தெய்வமாக விளங்கும் தூக்குதுரை என்ற கதாபாத்திரத்தில் மதுரை வட்டார வழக்கில் பேசி நடித்துள்ளார். அஜித்துக்கு ஜோடியாக நிரஞ்சனா கதாபாத்திரத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துள்ளார்.

இப்படத்தின் மோஷன் போஸ்டரை தொடர்ந்து முதல் சிங்கிள் பாடலான ‘அடிச்சி தூக்கு’ பாடலின் லிரிக் வீடியோ வெளியானது. இப்போது வரை இந்த பாடல் 4.1 மில்லியன் பார்வையாளர்களை கடந்து, சுமார் 4.7 மில்லியன் லைக்ஸ்களை பெற்று தொடர்ந்து யூடியூப்  ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் இருக்கிறது.

‘அடிச்சி தூக்கு’: எல்லையில் தல அஜித்தை கொண்டாடிய ராணுவ வீரர்கள்!

இந்நிலையில், இப்பாடலை இந்திய ராணுவ வீரர்கள் கேக் வெட்டி கொண்டாடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. எல்லையில் உள்ள இந்திய ராணுவ வீரர்களில் தல ரசிகரான ஒருவர் இதனை செய்துள்ளார். அவருடன் மற்ற வீரர்களும் அஜித்தின் ‘அடிச்சி தூக்கு’ பாடலை உற்சாகமாக ஆடிப்பாடி கொண்டாடியுள்ளனர். தல ரசிகர்களை இச்சம்வம் மிகவும் நெகிழச் செய்துள்ளது.

இந்த வீடியோவை பகிர்ந்த பாடலாசிரியர் விவேகா தனது ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இந்த பாடலை எழுதியதற்காக பாடலாசிரியர் விவேகாவிற்கு தல ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Share this story