அடுத்த படத்திற்காக 12 கிலோ எடையை குறைத்து, சிக்ஸ்பேக் லுக்கிற்கு மாறிய இளம் நடிகர்.

அடுத்த படத்திற்காக 12 கிலோ எடையை குறைத்து, சிக்ஸ்பேக் லுக்கிற்கு மாறிய இளம் நடிகர்.

டோலிவுட்டில் தனது திரைப்பயனத்தை துவங்கிய நடிகர் சந்தீப் கிஷான் ‘யாருடா மகேஷ்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். அதையடுத்து, இயக்குநர்  லோகேஷ் கனகராஜின் முதல் படமான ‘மாநகரம்’ திரைப்படத்தில் நடித்து  கோலிவுட்டில் ரசிகர்களைப் பெற்றார். அதனையடுத்து நெஞ்சில் துணிவிருந்தால், மாயவன் போன்ற படங்களில் நடித்தார். 

அடுத்த படத்திற்காக 12 கிலோ எடையை குறைத்து, சிக்ஸ்பேக் லுக்கிற்கு மாறிய இளம் நடிகர்.

அடுத்ததாக கார்த்திக் நரேன் இயக்கத்தில் நடித்துள்ள  ‘நராகாசூரன்’ பட வெளியீட்டுக்காக காத்திருக்கும் சந்தீப், சிம்புதேவன் இயக்கத்தில் ஆன்தாலஜி படமாக உருவாகும் ’கசட தபற’ என்ற படத்தில் சாந்தனு பாக்கியராஜ், ஹரிஸ் கல்யாண், பிரியா பவானி சங்கர், ரெஜினா, விஜயலட்சுமி, வெங்கட்பிரபு மற்றும் பிரேம்ஜி பல இளம் நடிகர்களுடன்  சேர்ந்து நடித்து வருகிறார்.

அடுத்த படத்திற்காக 12 கிலோ எடையை குறைத்து, சிக்ஸ்பேக் லுக்கிற்கு மாறிய இளம் நடிகர்.

இந்நிலையில் 2019ஆம் ஆண்டு ஹிப் ஹாப் ஆதியின் நடிப்பில் தமிழில் வெளியாகி மிகப் பெரிய வெற்றி பெற்ற ’நட்பே துணை’ படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்க இருக்கிறார்.  ஹாக்கி விளையாட்டு மற்றும்  அதில் நடக்கும் மைதான அரசியல் பற்றி பேசும் படமான  இந்த படத்திற்கு A1 எக்ஸ்பிரஸ் என பெயரிடப்பட்டுள்ளது. இதில் நடிக்க தயாராகி வரும் சந்தீப் கிஷான், 12 கிலோ உடல் எடையை குறைத்து 6 பேக் வைத்திருக்கிறார்.
 
ஜிம்மிற்கு செல்லாமல் இந்த லாக்டவுன் காலத்தில் விட்டிலிருந்தபடியே, பயிற்சியாளிரின் அறிவுறைப்படி அவர் இதை செய்திருக்கிறார். சிக்ஸ் பேக் புகைப்படத்துடன் இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள சந்தீப், இந்த லாக்டவுனில் 12 கிலோ எடையை குறைத்துள்ளேன். A1 எக்ஸ்பிரஸ் படத்தில் ஒரு சிறந்த ஹாக்கி வீரர் போன்று தோன்றுவதற்காக” என்று குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த படத்திற்காக 12 கிலோ எடையை குறைத்து, சிக்ஸ்பேக் லுக்கிற்கு மாறிய இளம் நடிகர்.

 

Share this story