அது ஜெயலலிதாவின் தவறு…எடப்பாடி பயப்படமாட்டார்' இயக்குநர் அமீர் ஆவேசம்!

அது ஜெயலலிதாவின் தவறு…எடப்பாடி பயப்படமாட்டார்' இயக்குநர் அமீர் ஆவேசம்!

பணம் கொடுக்கும் பைனான்சியர்கள் மத்திய மாநில அரசுகளை விமர்சித்தால் பணம் கிடையாது என்றார்கள்.

இயக்குநர் அசோக் தியாகராஜன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘மாயநதி’.  நடிகர் அபி சரவணன், அப்புகுட்டி,  வெண்பா ஆகியோர் நடித்துள்ள இந்த படத்தை ராஜி நிலா முகில் ஃபிலிம் தயாரித்துள்ளது. இளையராஜா மகள் ராஜா பவதாரணி இசையமைத்துள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று வடபழனியில் நடைபெற்றது. இதில்  இயக்குநர்  அமீர், யுவன் ஷங்கர் ராஜா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

அது ஜெயலலிதாவின் தவறு…எடப்பாடி பயப்படமாட்டார்' இயக்குநர் அமீர் ஆவேசம்!

அப்போது பேசிய அமீர், ‘தமிழ் சினிமாவில்  இப்படி ஒரு இசைக்குடும்பம் நமக்கு கிடைத்தது நமக்கு கிடைத்த பாக்கியம். ஒரு கலைஞனுக்கு சமூக அக்கறை இருக்க வேண்டும்.  அதற்காக சமூக வலைதளங்களில் பேசி கொண்டே இருந்தால் எந்த காரியமும் சாதிக்கமுடியாது. சினிமாவில் வெற்றி தான் முக்கியம்.என்னுடைய சந்தன தேவன் படம் ஆரம்பித்து 35 நாட்கள் படப்பிடிப்பு நடந்தன. அதன் பின்னர் படம் நிறுத்திவைக்கப்பட்டது. படத்துக்கு நான் தான் தயாரிப்பாளர். ஆனால்  பணம் கொடுக்கும் பைனான்சியர்கள் மத்திய மாநில  அரசுகளை விமர்சித்தால் பணம் கிடையாது என்றார்கள்.

அதனால் படத்தை நிறுத்திவிட்டேன். கலைஞர் இருக்கும் போது தமிழ் சினிமா குறித்த பிரச்னைகளை கேட்டு கொண்டு இருந்தார். அவர் ஆட்சியில் தான்  ஃபிலிம் சிட்டி உருவாக்கப்பட்டு  அதற்கு  எம்.ஜி.ஆர் பெயர் வைக்கப்பட்டது. ஜெயலலிதா ஆட்சியில் அது ஜெ.ஜெ. ஃபிலிம் சிட்டி என மாற்றியது. இது தவறான செயல். தற்போது உள்ள முதல்வர் எந்த பால் போட்டாலும் சிக்ஸ் அடிக்கிறார். அதனால் அவருக்கு பயம் இல்லை என்று நினைக்கிறேன். முதல்வரிடம் ஒரு கோரிக்கை வைக்கிறேன். நீண்ட நாட்களாக கொடுக்கப்படாமல் இருக்கும் தமிழக அரசு விருதுகளை வழங்க வேண்டும்’ என்றார். 

Share this story