அய்யோ பேய்! பிரியங்கா சோப்ராவை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

அய்யோ பேய்! பிரியங்கா சோப்ராவை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

மெட் கலா’ நிகழ்ச்சியில் தனது மேக்கப்பால் இணையத்தில் கடும் கிண்டலுக்கு ஆளாகியுள்ளார் பிரியங்கா சோப்ரா

சென்னை: ‘மெட் கலா’ நிகழ்ச்சியில் தனது மேக்கப்பால் இணையத்தில் கடும் கிண்டலுக்கு ஆளாகியுள்ளார் பிரியங்கா சோப்ரா.

உலக அளவில் உள்ள திரைப்பட நடிகர்களையும், ஆடை வடிவமைப்பாளர்களையும் ஒன்று சேர்க்கும் நிகழ்ச்சியாக மெர்காலா கொண்டாடப்படுகிறது. இந்த நிகழ்ச்சி 1948 முதல் நடத்தப்பட்டு வருகிறது. ஆடை வடிவமைப்பு தொடர்பான நிறுவனங்களின் வளர்ச்சி பணிகளுக்கு நிதி திரட்டும் விதமாக இந்நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. பெரிய நட்சத்திரங்கள் மட்டும் பங்குயேற்கும் நிகழ்ச்சியான இதில் அழைப்பிதழ் வந்தால் மட்டுமே கலந்துகொள்ள முடியும்.

இதில் நிக் ஜோன்ஸ், தனது மனைவி பிரியங்கா சோப்ராவுடன் கலந்து கொண்டார். மேலும் நடிகை தீபிகா படுகோனும் கலந்து கொண்டுள்ளார். ஒவ்வொருவரும் வித்தியாசமான முறையில் உடைகள் அணிந்து புகைப்படக்காரர்களுக்கு போஸ் கொடுப்பது வழக்கம்.

அய்யோ பேய்! பிரியங்கா சோப்ராவை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

அதில் நடிகை பிரியங்கா சோப்ராவின் கெட்டப் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வித்தியாசமான ஹேர் ஸ்டைல், அதன் மீது ஒரு கிரீடம், மிணுமிணுக்கும் ஆடை, கண்கள் ஓரம் பளபளக்கும் வெண்ணிற மேக்கப் என முழுவதுமாக மாறி வந்த பிரியங்கா சோப்ராவின் புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள், அவரது முடிக்கான மேக்கப்பை யோகி பாபுவின் தலைமுடியுடன் ஒப்பிட்டுக் கிண்டல் செய்து வருகின்றனர் .

அய்யோ பேய்! பிரியங்கா சோப்ராவை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

ஆனால், தீபிகா படுகோன் உடைகளை யாரும் கிண்டல் செய்யவில்லை. பிரியங்கா சோப்ராவின் புகைப்படங்களைக் கொண்டு மீம்ஸ்களும் உருவாக்கியுள்ளனர்.

Share this story