'ஆகச்சிறந்த படம் பார்க்கனும்னா, இதை பாருங்க’- மலையாள படத்தை பரிந்துரை செய்த இயக்குனர் நவீன்..

'ஆகச்சிறந்த படம் பார்க்கனும்னா, இதை பாருங்க’- மலையாள படத்தை பரிந்துரை செய்த இயக்குனர் நவீன்..

கொரோனா ஊரடங்கு காரணமாக வீட்டில் முடங்கிக் கிடக்கும் மக்கள் அனைவரும், தொலைகாட்சி சீரியல்கள், வெப் சீரிஸ்கள், சமூக வலைதளங்கள் என தங்களது நேரத்தை செலவிட்டு வருகின்றனர். பிரபலங்களும் இதையேத்தான் செய்து கொண்டிருக்கிறார்கள்.. நடிகைகள் பெரும்பாலும் தாங்கள் செய்யும் வேலைகளை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.

 

'ஆகச்சிறந்த படம் பார்க்கனும்னா, இதை பாருங்க’- மலையாள படத்தை பரிந்துரை செய்த இயக்குனர் நவீன்..

இந்நிலையில் மூடர் கூடம் படத்தை இயக்கியதன் மூலம் பிரபலமான இயக்குனர் நவீன், தனது ட்விட்டர் பக்கத்தில் மலையாள படம் ஒன்றை பரிந்துரைத்துள்ளார்.  அவர்  1987 ஆம் ஆண்டு மம்மூட்டி நடிப்பில் வெளியான ”தனியாவர்தனம்” என்ற மலையாள படத்தை பாருங்கள் என அனைவருக்கும் பரிந்துரை செய்துள்ளார். இந்த படத்தை பார்த்துவிட்டு தான் இரண்டு நாட்களுக்கு சாப்பாடு, தூக்கம் இல்லாமல் தவித்ததாகவும்  கூறியுள்ளார்.

'ஆகச்சிறந்த படம் பார்க்கனும்னா, இதை பாருங்க’- மலையாள படத்தை பரிந்துரை செய்த இயக்குனர் நவீன்..

இந்தத் திரைப்படம்சிறந்த கதை, சிறந்த நடிகர், சிறந்த துணை நடிகர் என 3 கேரள அரசிடமிருந்து பெற்றது. சிறந்த திரைப்படத்திற்கான ஃபிலிம்ஃபேர் விருதையும் பெற்றது. 

இது குறித்து கூறியுள்ள நவீன், “ஆகச்சிறந்த படம் ஒன்னு பாக்கனும்னு ஆசைபட்டிங்கனா ‘தனியாவர்தனம்’ பாருங்க. மம்மூக்கா நடிப்பின் உச்சம். இத பாத்துட்டு ரெண்டு நாள் சாப்ட முடியாம தூக்கம் இல்லாம தவிச்சவன் நான்” என குறிப்பிட்டுள்ளார்.

'ஆகச்சிறந்த படம் பார்க்கனும்னா, இதை பாருங்க’- மலையாள படத்தை பரிந்துரை செய்த இயக்குனர் நவீன்..

Share this story