ஆக்‌ஷன் ஹீரோ பிஜு-2 வருகிறது.

ஆக்‌ஷன் ஹீரோ பிஜு-2 வருகிறது.

2016ல் வெளிவந்த ஆக்‌ஷன் ஹீரோ பிஜு எது மாதிரியும் இல்லாத புது மாதிரி படம். அப்போது வெறும் ரொமாண்டிக் ஹீரோவாக இருந்த நிவின் பாலியை போலீஸ் அதிகாரியாக்கி அபிரித் ஷைன் எடுத்த படம் ஆகிஷன் ஹீரோ பிஜு. ஆனால் அது வழக்கமான அதிரடி ஆக்‌ஷன் கொண்ட போலீஸ் படம் அல்ல, ஒரு காவல்துறை அதிகாரியின் வாழ்க்கையை உள்ளது உள்ளபடி காட்டியபடம். ஆனால் அது மலையாள ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.

ஆக்‌ஷன் ஹீரோ பிஜு-2 வருகிறது.

இப்போது நிவின் பாலி ராஜிவ் ரவி இயக்கத்தில் நடித்த துறைமுகம் ரிலீஸுக்கு காத்திருக்கிறார். படையோட்டம் படத்தில் நடித்து வருகிறார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட காயங்குளம் கொச்சுன்னி எடுபடாததால் நிவினுக்கு உடனடியாக ஒரு ஹிட் தேவைப்படுகிறது. இப்போது அபிரித் ஷைன்  புதுமுகங்களை வைத்து இயக்கி வெளியிட்டு இருக்கும் குங்ஃபூ மாஸ்ட்டரும் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. அதனால் மீண்டும் நிவினும், அபிரித்தும் இணைந்து ஆக்‌ஷன் ஹீரோ பிஜு-2 ல் இறங்குகிறார்கள்.

Share this story