ஆங்கிரசே மீடியா விமர்சனம்.

ஆங்கிரசே மீடியா  விமர்சனம்.

கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கு பிறகு இர்ஃபான் கான் நடித்து வெளிவருவதால் மிகுந்த எதிர்பார்பை ஏற்படுத்திய படம்! ஹோமி அஞ்சானியா இயக்கத்தில் கரீனா கஃபூர்,ராதிகா மதன்,டிம்பிள் கபாடியா,கிக்கி ஷ்ரத்தா,தீபக் டோபிரியேல் என்று ஒரு நல்ல நடிகர் கூட்டமும்,நான்கு (!) திரைக்கதை ஆசிரியர்களும் இருந்தும் ஏமாற்றத்தையே கொடுத்து இருக்கிறார் இயக்குனர் ஹோமி அஞ்சானியா!

ஆங்கிரசே மீடியா  விமர்சனம்.
உதய்பூர் மிட்டாய் கடைக்காரர் இர்ஃபான் மகளுக்கு லண்டன் பல்கலையில் படிக்க ஆசை வருகிறது. மகள் மீது அநியாயத்திற்கு பாசம் வைத்திருக்கும் தந்தை அவளை அழைத்துக்கொண்டு லண்டன் வருகிறார். அவர்களது ஃபேமிலி மிட்டாய் பிராண்ட்டிற்கு சொந்தம் கொண்டாடும் சகோதரனும் உண்டு.இர்ஃபான் கானை அறிமுகம் செய்யும்போதே அவர் எந்த விவகாரத்திலும் சட்டென முடிவெடுக்க மாட்டார்,அப்படி எடுத்தாலும் தவறான முடிவைத்தான் எடுப்பார் என்பதை  ஒரு வீதிகிரிக்கெட்டில் வைத்து சொல்லி விடுகிறார்கள். அப்போது சிரித்துத் தொலைத்தற்காக படம் முழுக்க இதை வைத்தே காமெடு என்கிற பெயரில் தலையச் சூடாக்கிவிடுகிறார்கள். காமெடிப் படத்திற்கு லாஜிக் வேண்டாம் தான்,அதற்காக இங்கிலாந்தில் இருந்து நாடுகடத்தப்படும் இர்ஃபான்  பாக்கித்தான் போலிப் பாஸ்போர்ட்டில் லண்டன் திரும்புவதெல்லாம் இப்போது இந்தியாவிலேயே சாத்தியமில்லாத விசயம்.

ஆங்கிரசே மீடியா  விமர்சனம்.
அதேபோல இர்ஃபானும்,அவரது சகோதரும் சீப்பான விஸ்கியைக் குடித்து விட்டு தோழியிடம் தாங்கள் ஒருவருக்கு ஒருவர் செய்த துரோகங்களை மாறிமாறி ஒப்பிக்கும் காட்சியில் இர்ஃபான்,தீபக் டோபிரியேல் என்கிற இரண்டு நடிகர்கள் மட்டும் இல்லாவிட்டால் தியேட்டரே காலியாகி இருக்கும்.லண்டன் போலீஸ் அதிகாரியாக வரும் கரீஷ்மா முதல் அத்தனை பேரும் வீனடிக்கப் பட்டு இருக்கிறார்கள்.இத்தனை இடை வெளிக்குப் பிறகு இர்ஃபான் இப்படி ஒரு படத்தில் நடித்திருக்க வேண்டாம்.

Share this story