இணையத்தில் ‘செக்கச்சிவந்த வானம்’: மீண்டும் கைவரிசை காட்டிய தமிழ் ராக்கர்ஸ்!

இணையத்தில் ‘செக்கச்சிவந்த வானம்’: மீண்டும் கைவரிசை காட்டிய தமிழ் ராக்கர்ஸ்!

மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘செக்கச்சிவந்த வானம்’ திரைப்படத்தை தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் லீக் செய்தது படக்குழுவை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சென்னை: மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘செக்கச்சிவந்த வானம்’ திரைப்படத்தை தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் லீக் செய்தது படக்குழுவை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா நிறுவன தயாரிப்பில் வெளியான ‘செக்கச்சிவந்த வானம்’ திரைப்படத்தில் அரவிந்த்சாமி, சிம்பு, விஜய்சேதுபதி, அருண் விஜய், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, அதிதி ராவ் ஹிதாரி உள்ளிட்ட ஏராளமான நட்சத்திர பட்டாளம் நடித்துள்ளது.

இணையத்தில் ‘செக்கச்சிவந்த வானம்’: மீண்டும் கைவரிசை காட்டிய தமிழ் ராக்கர்ஸ்!

நீண்ட இடைவெளிக்குப் பின் சிம்பு நடிப்பில் வெளியாகியுள்ள இப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. மல்டி ஸ்டார் படம் என்றாலும், அனைத்து நடிகர்களும் தங்களது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பதாக விமர்சனங்கள் வந்துள்ளது.

இந்நிலையில், இப்படம் ரிலீசான அன்றே தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் திரைப்படம் லீக்காகியுள்ளது. இதனை பலரும் டவுன்லோட் செய்து பார்த்துள்ளதாக கூறப்படுகிறது. ‘செக்கச்சிவந்த வானம்’ படத்துக்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்தாலும், தமிழ் ராக்கர்ஸின் இந்த செயலால் படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இணையத்தில் ‘செக்கச்சிவந்த வானம்’: மீண்டும் கைவரிசை காட்டிய தமிழ் ராக்கர்ஸ்!

தமிழ் சினிமாவுக்கு கடும் சவாலாக இருக்கும் பைரசியில் செக்கச்சிவந்த வானம் திரைப்படமும் சிக்கியுள்ளது. இதுபோன்று இணையதளத்தில் திருட்டுத்தனமாக திரைப்படங்கள் ரிலீசானால், அதில் உழைத்த படக்குழுவுக்கு தான் நஷ்டம். இந்த பூச்சாண்டி காட்டும் பைரசிக்காரர்களை பிடித்துக் காட்டுகிறேன் என தயாரிப்பாளர் சங்க தலைவரும், நடிகருமான விஷால் சவால்விட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Share this story