இணையத்தில் வைரலாகும் வெற்றிமாறன்- தனுஷ் கூட்டணியின் நிறுத்தப்பட்ட படத்தின் போஸ்டர் !

இணையத்தில் வைரலாகும் வெற்றிமாறன்- தனுஷ் கூட்டணியின் நிறுத்தப்பட்ட படத்தின் போஸ்டர் !

தமிழ் சினிமாவின் வெற்றிக் கூட்டணியாக உருவெடுத்துள்ளது தனுஷ்- வெற்றிமாறன் கூட்டணி. இவர்கள் இணையும் படங்கள் யாவும் வெற்றிக் கோட்டைத் தொட்டுவிடுபவை. ஆடுகளம், வடசென்னை மற்றும் அசுரன் என இவர்களின் பயணம் பாசப்பிணைப்பால்  தொடர்ந்துவருகிறது. வெற்றிமாறன்  மீது கொண்ட  நம்பிக்கையால்  படத்தின் கதையைக் கூட கேட்காமல் தயாரிக்க முன்வந்த படம் தான் விசாரணை. வெற்றிமாறனும் அந்த நம்பிக்கையை காப்பாற்றி படத்தை உலகளவில் எடுத்துச் சென்றார்.

இணையத்தில் வைரலாகும் வெற்றிமாறன்- தனுஷ் கூட்டணியின் நிறுத்தப்பட்ட படத்தின் போஸ்டர் !

தற்போது வெற்றிமாறன்- தனுஷ் கூட்டணியில் யுவன் ஷங்கர் ராஜா இசையில் வெளிவர இருந்த படம் தேசிய நெடுஞ்சாலை. சில காரணங்களால் கைவிடப்பட்ட இந்த படத்தின் போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த படத்திற்கு நா. முத்துக்குமார்  பாடல்கள் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this story