இணைய தேடலில் முதலிடத்தில் உள்ள பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா…

இணைய தேடலில் முதலிடத்தில் உள்ள பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா…

ஆண்டுதோறும் இணையத்தில் தேடப்படும் பிரபலங்களின் பட்டியல் வெளியிடப்படும். அந்த வகையில் 2020ம் ஆண்டின் முதல் காலாண்டில் அதிகளவு இணையத்தில் தேடப்பட்ட பிரபலங்களின் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. இந்தக் கருத்துக் கணிப்பை செம் ரஷ்(SEMrush) என்ற நிறுவனம் நடத்தியது. இந்த லாக்டவுன் காலத்தில் மக்கள் யார் யாரை அதிகம் கூகுளில் தேடியிருக்கிறார்கள் என்ற தகவல்களைப் பார்க்கலாம். இந்தமுறை அதிகம் தேடப்பட்ட பிரபலங்களில் பிரியங்கா சோப்ரா முதலிடத்தை பிடித்திருக்கிறார்.

இணைய தேடலில் முதலிடத்தில் உள்ள பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா…

பாலிவுட், ஹாலிவுட் என பிசியாக இருக்கும் நடிகை பிரியங்கா சோப்ரா, கொரோனா வைரஸ் குறித்தும், அதில் இருந்து மனித சமூதாயம் நிச்சயம் மீண்டு வரும் எனவும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக அவர் பதிவுகளை வெளியிட்டிருந்தார். சராசரியாக 39 லட்சம் தடவைக்கு மேல் அவர் தேடப்பட்டு இருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து, கடந்த சில ஆண்டுகளாகவே முதலிடத்தில் இருந்துவந்த கவர்ச்சி நடிகை சன்னி லியோன் இந்த முறை இரண்டாவது இடத்திற்கு தளப்பட்டுள்ளார். ஆனாலும், 31 லட்சத்திற்கும் அதிகமானோர் அவரை கூகுளில் தேடியுள்ளனர்.

இணைய தேடலில் முதலிடத்தில் உள்ள பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா…

பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் மற்றும் வசூல் மன்னனான சல்மான் கானை சுமார் 21 லட்சம் முறை தேடப்பட்டுள்ளார். இதேபோல் கிரிக்கெட் வீரர் விராட் கோலியை 20 லட்சம் முறையும், ஹிரித்திக் ரோஷனை 13 லட்சம் தடவையும் மக்கள் இணையத்தில் தேடியுள்ளனர். பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃபை 19 லட்சம் முறை இணையத்தில் நெட்டிசன்கள் தேடியுள்ளனர்.

இணைய தேடலில் முதலிடத்தில் உள்ள பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா...

அவரை தொடர்ந்து இந்த டாப் பிரபலங்கள் பட்டியலில் நடிகர் ஷாருக்கான், டைகர் ஷெராஃப், விஜய் தேவரகொண்டா, மகேஷ் பாபு உள்ளிட்ட நடிகர்களும், தீபிகா படுகோனே, திஷா பதானி, ஆலியா பட், சாரா அலி கான், கரீனா கபூர் மற்றும் ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட நடிகைகளும் இடம்பிடித்துள்ளனர்.

இணைய தேடலில் முதலிடத்தில் உள்ள பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா…

இந்த ஆண்டும் பாலிவுட் பெண்கள், ஆண்களைப் பின்னுக்குத் தள்ளி இணைய தேடலில் முதலிடம் பிடித்துள்ளனர்.

இணைய தேடலில் முதலிடத்தில் உள்ள பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா…

Share this story