இதற்கு கேப்ஷன் என்ன தெரியுமா? கண்டு பிடியுங்கள்! என்.ஜி.கே ரசிகர்களுக்கு படக்குழு கொடுத்த புதிய டாஸ்க்!

இதற்கு கேப்ஷன் என்ன தெரியுமா? கண்டு பிடியுங்கள்! என்.ஜி.கே ரசிகர்களுக்கு படக்குழு கொடுத்த புதிய டாஸ்க்!

நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படத்தின் படக்குழு ரசிகர்களுக்கு புதிய டாஸ்க் ஒன்றை அறிவித்துள்ளது.

சென்னை: நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள என்.ஜி.கே படத்தின் படக்குழு ரசிகர்களுக்கு புதிய டாஸ்க் ஒன்றை அறிவித்துள்ளது. 

சூர்யா-செல்வராகவன் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் என்.ஜி.கே. எஸ்.ஆர்.பிரபு தயாரிப்பில் உருவான இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிகை சாய்பல்லவி மற்றும் ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளனர். முதல் முறையாக சூரியாவும், செல்வராகவனும் இணைந்துள்ளது ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ளது. 

இதற்கு கேப்ஷன் என்ன தெரியுமா? கண்டு பிடியுங்கள்! என்.ஜி.கே ரசிகர்களுக்கு படக்குழு கொடுத்த புதிய டாஸ்க்!

சமீபத்தில் வெளியான இப்படத்தின் ட்ரைலர், இணையத்தில் சக்கை போடு போட்டது. இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. 

இந்த நிலையில் ரசிகர்களைக் குஷி படுத்தும் விதமாக படக்குழு ஜாலியான விளையாட்டு ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. சாய் பல்லவி மற்றும் ரகுல் பிரீத் சிங் கிஃப் புகைப்படத்தை வெளியிட்டு, இதற்கு கேப்ஷன் என்ன என்பதை நீங்களே கண்டு பிடியுங்கள் என்று ட்விட்டரில் பதிவு செய்துள்ளனர்.  இதற்கு ஏராளமான கமெண்டுகள் குவிந்து வருகின்றனர். 

Share this story