இது என்னடா மண்ட ஒரு தினுசா இருக்கு… பிரியங்கா சோப்ராவை கலாய்க்கும் ரசிகர்கள்..

இது என்னடா மண்ட ஒரு தினுசா இருக்கு… பிரியங்கா சோப்ராவை கலாய்க்கும் ரசிகர்கள்..

பாலிவுட்டின் முன்னணி நடிகையாக கலக்கி வரும் பிரியங்கா சோப்ராவுக்கு உலகளவில் ரசிகர்கள் உள்ளனர். ஹாலிவுட்டில் கால் பதித்த முதல் இந்திய நடிகையான இவர் தமிழில் தளபதி விஜய்யுடன் ’தமிழன்’ படத்தில் நடித்துள்ளார். ஹாலிவுட் நடிகரும் பாடகருமான நிக் ஜோனஸை திருமணம் செய்து கொண்ட பிரியங்கா சோப்ரா, தற்போது அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வசித்து வருகிறார். சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவ்வாக இருக்கும் பிரியங்கா சோப்ராவுக்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மட்டும் 53 மில்லியன் பாலோயர்கள்.  அவர் பதிவிடும் ஒவ்வொரு பதிவுக்கும் மில்லியன் கணக்கில் லைக்குகள் சாதாரணமாக வந்து விழுகின்றன.

இது என்னடா மண்ட ஒரு தினுசா இருக்கு… பிரியங்கா சோப்ராவை கலாய்க்கும் ரசிகர்கள்..

கூகுள் தேடலில் முதலிடத்தில் இருந்த கவர்ச்சி நடிகை சன்னி லியோனை, முன்னிலை வகித்து வந்த பாலிவுட் நடிகர் சல்மான் கான் ஆகியோரை அசால்ட்டா பின்னுக்குத் தள்ளி தற்போது பிரியங்கா சோப்ரா தான் முதலிடத்தில் இருந்து வருகிறார். கடந்த 2019ம் ஆண்டு கணக்கெடுப்பின் படியும், சமீபத்தில் நடைபெற்ற 2020ம் ஆண்டுக்கான முதல் 4 மாத கணக்கெடுப்பிலும், பிரியங்கா சோப்ரா தான் டாப்.

இது என்னடா மண்ட ஒரு தினுசா இருக்கு… பிரியங்கா சோப்ராவை கலாய்க்கும் ரசிகர்கள்..

இந்நிலையில் லாஸ் ஏஞ்சல்ஸில் , குளிச்சுட்டு வந்து, பாத் த்ரோப்புடன் ஒரு கையில் அந்த பாத் த்ரோப் கழண்டு விழுந்து விடாத வண்ணம் கவனமாக பிடித்துக் கொண்டு பிரியங்கா சோப்ரா நடனமாடும் வீடியோவை  தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

பிரியங்கா சோப்ரா வெளியிட்டுள்ள இந்த த்ரோபேக் வீடியோ, மேகஸின் ஒன்றிற்கான ஃபோட்டோஷூட்டின் போது எடுக்கப்பட்டது. அந்த வீடியோவில் அவரது ஹேர் ஸ்டைல் தான் ஹைலைட். விஜய்யின் வில்லு படத்தில் வரும் வடிவேலுவின் மண்டையை போல இருக்கும் அந்த ஹேர்ஸ்டைலை ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். சிலர் ஹேர் மவுண்டைன், ஃபன்னி ஹேர்  என்றும் அவரது தலைமுடியை கிண்டலடித்து வருகின்றனர்.

 

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Priyanka Chopra Jonas (@priyankachopra) on

 

Share this story