"இந்த சீன் எமோஷனலாக எனக்கு அப்பாவின் பாசத்தை ஞாபகப்படுத்தும்" : அசுரன் குறித்து நடிகர் டீஜே உருக்கம்!

"இந்த சீன் எமோஷனலாக எனக்கு அப்பாவின் பாசத்தை ஞாபகப்படுத்தும்" : அசுரன் குறித்து நடிகர் டீஜே உருக்கம்!

இயக்குநர் வெற்றிமாறன் – தனுஷ் இருவரின் வெற்றி கூட்டணியில் உருவாகிய அசுரன் திரைப்படம் சமீபத்தில் திரைக்கு வந்தது. கலைப்புலி.எஸ். தாணுவின் வி கிரியேஷன்ஸ் சார்பில் உருவாகியுள்ள  இப்படம் பூமணி எழுத்தில் வெளியான வெக்கை நாவலை மையமாக வைத்து  எடுக்கப்பட்டுள்ளது.

"இந்த சீன் எமோஷனலாக எனக்கு அப்பாவின் பாசத்தை ஞாபகப்படுத்தும்" : அசுரன் குறித்து நடிகர் டீஜே உருக்கம்!

இதில் மலையாள நடிகை மஞ்சு வாரியர் , பிரகாஷ் ராஜ் , பசுபதி, டீஜே, கென் கருணாஸ் , பாலாஜி சக்திவேல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் 100 கோடி வசூல் சாதனை படைத்தது. இதையடுத்து அசுரன் படத்தை பல்வேறு தரப்பினரும் பாராட்டி மகிழ்ந்தனர். 

"இந்த சீன் எமோஷனலாக எனக்கு அப்பாவின் பாசத்தை ஞாபகப்படுத்தும்" : அசுரன் குறித்து நடிகர் டீஜே உருக்கம்!

இந்நிலையில் அசுரன் டத்தில் நடித்த டீஜே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், அசுரன் படத்தில் இடம்பெற்ற அப்பாவுடன் இருக்கும் சென்டிமென்ட் காட்சியை பதிவிட்டு,  ”நான் பொதுவாக அம்மா பையன்தான். ஆனால், இந்த சீன் எமோஷனலாக எனக்கு அப்பாவின் பாசத்தை ஞாபகப்படுத்தும்’ என்று குறிப்பிட்டுள்ளார். 

[video:https://www.instagram.com/p/CAr_Thtjlch/?utm_source=ig_web_copy_link]

 

Share this story