இந்த வயசிலேயே பாட ஆரம்பிச்சுட்டாங்களா!? ஸ்ருதிஹாசனின் சிறுவயது வைரல் புகைப்படம்

இந்த வயசிலேயே பாட ஆரம்பிச்சுட்டாங்களா!? ஸ்ருதிஹாசனின் சிறுவயது வைரல் புகைப்படம்

ஸ்ருதிஹாசனின் ப்ளாக் அண்ட் வைட் பள்ளிப்பருவ புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அதில் அவர் பிரபல பாடகி ஆஷா போஸ்லே அருகே அமர்ந்து ஒரு பாடலைப் பாடுவது போல் இருப்பதைக் காணலாம்.

நடிகை ஸ்ருதிஹாசன் நடிப்பில் மட்டுமல்லாமல் பாடலிலும் தனித்திறமை பெற்றிருக்கிறார். தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த ஸ்ருதி தற்போது பாலிவுட் திரையுலகிலும் தனி இடம் பிடித்து வருகிறார். கடந்த ஆண்டு, ட்ரெட்ஸ்டோன் என்ற தலைப்பில் சர்வதேச ஆக்சன் ட்ராமா சீரிஸில் நடித்தார். அந்த படத்தில் இந்திய வம்சாவளிக் கொலையாளியின் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 

இந்த வயசிலேயே பாட ஆரம்பிச்சுட்டாங்களா!? ஸ்ருதிஹாசனின் சிறுவயது வைரல் புகைப்படம்

​​ஸ்ருதிஹாசனின் ஒரு த்ரோபேக் புகைப்படம் ஒன்று வெளிவந்துள்ளது. அதில் ஸ்ருதி ஹாசன் ஒரு பாடலைப் பாட அதை ஆஷா போன்ஸ்லே கேட்டுக்கொண்திருக்கிறார். 
சிறுவயதிலிருந்தே இவரது பாடல் ஆர்வத்திற்கு இந்த புகைப்படம் ஒரு சாட்சி. 

Share this story