இனி பேனரை நம்பி படம் பார்க்கக் கூடாது என்பதற்கு இந்தப்படம் உதாரணம்..! – "பெண்குயின்" விமர்சனம்

இனி பேனரை நம்பி படம் பார்க்கக் கூடாது என்பதற்கு இந்தப்படம் உதாரணம்..! – "பெண்குயின்" விமர்சனம்

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில்  கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள  திரைப்படம்  ‘பெண்குயின்’. இதை இயக்குநர் ஈஸ்வர் கார்த்திக் இயக்கியுள்ளார். இதில் மாதம்பட்டி  ரங்கராஜ், லிங்கா உட்பட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இனி பேனரை நம்பி படம் பார்க்கக் கூடாது என்பதற்கு இந்தப்படம் உதாரணம்..! – "பெண்குயின்" விமர்சனம்

‘பெண்குயின் திரைப்படம்’ அமேசான் பிரைமில் இன்று வெளியாகியுள்ளது.  படம் வெளியான சில நிமிடங்களிலேயே அதற்கான விமர்சனமும் இணையத்தில் வரத் துவங்கிவிட்டன.  கீர்த்திசுரேஷ் ரிதம் என்ற கர்ப்பிணி பெண் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கீர்த்தி சுரேஷுக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு குழந்தை இருந்த  நிலையில் அந்த குழந்தை தொலைந்து போனதால் முன்னாள் கணவர் லிங்கா உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விவாகரத்து செய்துவிட்டு கௌதம் கதாபாத்திரத்தில் நடித்துள்ள மாதம்பட்டி நாகராஜை  திருமணம் செய்து கொள்கிறார்.  இதையடுத்து பல வருடங்களுக்கு பிறகு அந்த குழந்தை அஜய்,  கீர்த்தி சுரேஷின் கண்முன்னே வந்து நிற்க ஒரு தாய்க்கு உரிதான உணர்வுகளை வெளிப்படுத்தி இருக்கிறார் கீர்த்தி சுரேஷ். 

ஆனாலும் குழந்தையை கடத்தியவன் கீர்த்தி சுரேஷ் மற்றும் குழந்தையை  நெருங்கிவர அந்த கடத்தல்காரன் யார் ? எதற்காக குழந்தையை கடத்துகிறான் என்பதை தான் சஸ்பென்ஸ் கலந்த திரில்லருடன் பெண் குயின் சொல்கிறது. 

இனி பேனரை நம்பி படம் பார்க்கக் கூடாது என்பதற்கு இந்தப்படம் உதாரணம்..! – "பெண்குயின்" விமர்சனம்

படத்தில் கீர்த்தி சுரேஷ் மட்டுமே பிளஸ் பாயிண்டாக உள்ளார்.  ஒரு தாய்க்கே உரிய பாசமும் , பதட்டமும்,  அரவணைப்பையும் தனது உணர்வுகளின் மூலம் மிக அழகாக வெளிப்படுத்தி இருக்கிறார் கீர்த்தி சுரேஷ். ஆனால் இதில் நடித்துள்ள மற்ற நடிகர்கள் மிகவும் சுமாராகவே நடித்துள்ளனர் எனலாம். 

படத்தின் ஆரம்பக்கட்ட போக்கு ஒரு சஸ்பென்ஸ் திரில்லரை கணக்கச்சிதமாக  நம் கண்முன்னே கொண்டு வந்து நிற்க வைக்கும் என்று நாம் நினைக்கும் போது கொஞ்சம் கொஞ்சமாக கதையை சொதப்பல் பாணியை நோக்கி அழைத்துச் சென்றிருக்கிறார் இயக்குநர். 

இனி பேனரை நம்பி படம் பார்க்கக் கூடாது என்பதற்கு இந்தப்படம் உதாரணம்..! – "பெண்குயின்" விமர்சனம்

கனவுக் காட்சிகளை வைத்து பயமுறுத்துவது,  ஆபத்தான இடம் என்று தெரிந்தும் அந்த இடத்துக்கு கர்ப்பிணி பெண்ணான ரிதம் செல்வது என்பது சலிப்பை ஏற்படுத்துகிறது. கடத்தல்காரன் வீட்டிலேயே பிணங்களைப் போட்டு வைப்பது எல்லாம் பல தமிழ் படங்களிலேயே நாம் பார்த்த ஒன்று தான். 

கடத்தல்காரன் யார் என்று சொல்வதில் இயக்குநர் நேரத்தை சவ்வு போல் இழுத்துள்ளார். ஒரு கட்டத்தில் யாரை வேண்டுமானாலும் கொண்டுவந்து நிறுத்துங்கள் படம் முடிந்தால் போதும் என்ற நிலைக்கு நாம் ஆளாகிறோம். இதனால் ஒரு திரில்லர் படத்திற்கான இலக்கணத்தை இயக்குநர்  தவற விட்டுள்ளார் என்பது வேதனை. 

குழந்தைகள் அதிகம் விரும்பும் சார்லிசாப்ளின் கெட்டப்பில் சைக்கோ கொலைகாரன் ஒருவன் குழந்தைகளை கடத்துவதாக காண்பித்துள்ளது ஒரு தவறான உதாரணமாக நினைக்கத் தோன்றுகிறது.
சந்தோஷ் நாராயணனின் இசையும், கார்த்திக் பழனியின் ஒளிப்பதிவும் தான் இப்படத்திற்கு  ஒரு நல்ல திரில்லருக்கான பலத்தை கொடுக்கிறது. 

இனி பேனரை நம்பி படம் பார்க்கக் கூடாது என்பதற்கு இந்தப்படம் உதாரணம்..! – "பெண்குயின்" விமர்சனம்

இது போன்ற சில படங்களின் சொதப்பல்களால் இனிவரும் காலங்களில் அமேசான் தமிழ் படங்களை வாங்கி வெளியிடும் என்ற பயத்தை உண்டாக்கி உள்ளது.  நம்பமுடியாத திருப்பங்கள், சொதப்பலான கதை, ஏனோ தானோ என்ற நடிகர்களின் தேர்வு போன்றவை பெண்குயின் படத்தின் மீதான ஆர்வத்தை சுக்குநூறாக உடைத்துள்ளது.

Share this story