இராஜமௌலி படத்தில் மூன்று வேடங்களில் ஜுனியர் என்.டி.ஆர்!

இராஜமௌலி படத்தில் மூன்று வேடங்களில் ஜுனியர் என்.டி.ஆர்!

அடுத்த ஜனவரியில்தான் ராஜமெளலியின் படம் வெளிவரப்போகிறது.இன்னும் பெயர்கூட முடிவாகவில்லை.அதே RRRதான். ஆனால் படம் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் வந்துகொண்டே இருக்கின்றன. இந்தப் படத்தில் 19ம் நூற்றாண்டில் ஆந்திராவில் வாழ்ந்த இரண்டு சுதந்திரப் போராட்ட வீரர்களையும் அவர்களுக்கு இடையேயான நட்பையும் சொல்கிறார் ராஜமெளலின் என்று நம்பப் படுகிறது.

இராஜமௌலி படத்தில் மூன்று வேடங்களில் ஜுனியர் என்.டி.ஆர்!

இதில் ஒருவர் கொம்மாரம் பீம்.இவர் ஐதராபாத்தை ஆண்ட நிஜாமுக்கு எதிராகக் கொரில்லா போரில் ஈடுபட்டவர். இதுவன்றி ரயிலில் குண்டுவைக்கும் இன்னொரு கேரக்டர்,காட்டுக் கொள்ளையன் ஒருவன் என ஜூனியர் என்.டி.ஆர் மூன்று வேடத்தில் நடிப்பதாகத் தெரிகிறது.

இராஜமௌலி படத்தில் மூன்று வேடங்களில் ஜுனியர் என்.டி.ஆர்!

ஆனால் மெகா பவர்ஸ்டார் ராம்சரன் தேஜா என்ன வேடத்தில் நடிக்கிறார், எத்தனை வேடத்தில் நடிக்கிறார் என்பது இன்னும் வெளியாகவில்லை. இவர்கள் தவிர அஜய் தேவ்கான்,ஆலியா பட்,ஒலிவியா மோரிஸ் ஆகியோரும் நடித்திருக்கும் இந்தப் படத்தின் சுவாரசியங்களை மிகவும் ரகசியமாக வைத்திருக்கிறார் ராஜமெளலி!.

Share this story