ஊரடங்கை டான்ஸ் ஆடி ஜாலியாக கழிக்கும் "கோமாளி" நாயகி!

ஊரடங்கை டான்ஸ் ஆடி ஜாலியாக கழிக்கும் "கோமாளி" நாயகி!

கடந்த ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற  திரைப்படம்  கோமாளி. இத்திரைப்படத்தில் ஜெயம் ரவியின் பள்ளி வருடக் காதலியாக நடித்தவர் சம்யுக்தா ஹெக்டே. 

ஊரடங்கை டான்ஸ் ஆடி ஜாலியாக கழிக்கும் "கோமாளி" நாயகி!

முதல் படத்திலேயே ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்ட சம்யுக்தா ஹெக்டே பப்பி படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.  சம்யுக்தா ஹெக்டே  நடிப்பு மட்டுமின்றி வொர்க் அவுட் விஷயத்திலும்  அதிக ஈடுபாட்டுடன் செயல்பட்டு வருகிறார். 

ஊரடங்கை டான்ஸ் ஆடி ஜாலியாக கழிக்கும் "கோமாளி" நாயகி!

இதனால் அவ்வபோது புது புது வொர்க் அவுட் வீடியோவை இணையத்தில் வெளியிடுவதை அவர் வழக்கமாக வைத்துள்ளார். 

[video:https://www.instagram.com/p/B-M011TFu6x/?utm_source=ig_web_copy_link]

இந்நிலையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், சம்யுக்தா நடனம் ஆடி பொழுதை கழித்து வருகிறார். ஊரடங்கு முதல் நாள், 2 ஆம் நாள் என பதிவிட்டு புது புது டான்ஸ் வீடியோக்களை இணையத்தில் பதிவிட்டு வருகிறார். இதற்கு லைக்ஸ் குவிந்து வருகின்றன. 

 

 

Share this story