எட்டாவது வள்ளல் எம்.ஜி. ஆர். அவருக்கே அள்ளிக்கொடுத்த சாண்டோ சின்னப்பா தேவர்

எட்டாவது வள்ளல் எம்.ஜி. ஆர். அவருக்கே அள்ளிக்கொடுத்த சாண்டோ சின்னப்பா தேவர்

அன்றைய தேதி 13.1.1967.பொங்கலுக்கு முதல்நாள்.அந்த ஆண்டு  எம்.ஜி.ஆர் நடித்த தேவர் ஃபிலிம்ஸ் தயாதிப்பான ‘தாய்க்குத் தலைமகன்’ திரைப்படம் வழக்கம்போல பிளாசா தியேடரில் ரிலீஸ் ஆகியிருந்தது. அந்த சமையத்தில் 9.12.66 அன்று ரிலீஸ் ஆன எம்.ஜி.ஆர் சரோஜாதேவி,எம்.ஆர் ராதா நடித்த ‘பெற்றால்தான் பிள்ளையா’ திரைப்படம் திருவல்லிக்கேனி ஸ்டார்  தியேட்டரில் ஓடிக்கொண்டு இருந்தது.

எட்டாவது வள்ளல் எம்.ஜி. ஆர். அவருக்கே அள்ளிக்கொடுத்த சாண்டோ சின்னப்பா தேவர்

மாலை 6 மணிக்கு சாண்டோ சின்னப்ப தேவர் தனது தி.நகர் அலுவலகத்தில் இருந்து பிளாசா தியேட்டருக்குப் போய் படத்தின்  ரிசல்ட்டைப் பார்க்க நண்பர்களுடன் கிளம்பிக் கொண்டு இருந்தார். அப்போது தேவர் ஃபிலிம்ஸ் படங்களின் பத்திரிகை விளம்பரங்களை நிர்வகித்து வந்த எலிகண்ட் பப்ளிசிட்டீஸ் கமலநாதன் தேவருக்கு ஃபோன் செய்து,எம்.ஆர்.ராதா, எம்.ஜி.ஆரை சுட்டுவிட்டு தன்னையும் சுட்டுக்கொண்டார் என்கிற தகவல்களை சொல்லிவிட்டு இருவரும் இப்போது ராயப்பேட்டை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர் என்கிற தகவலையும் சொல்லி இருக்கிறார். 

எட்டாவது வள்ளல் எம்.ஜி. ஆர். அவருக்கே அள்ளிக்கொடுத்த சாண்டோ சின்னப்பா தேவர்

கலவரங்கள் தொடங்கி விட்டன.பிளாஸா,ஸ்டார் டாக்கீசில் படம் பார்த்துக்கொண்டு இருந்த ரசிகர்கள் உடனே தியேட்டரை விட்டு வெளியேறினர்.ராயப்பேட்டை மருத்துவமனை எதிரே ரசிகர்கள் திரள துவங்கி இருந்தனர்.முதலுதவிக்குப் பிறகு எம்.ஜி.ஆர் பொதுமருத்துவ மனைக்கு மாற்றப்பட்டார்.

தேவர் தி.நகரில் இருக்கும் அகஸ்த்தியர் கோவிலுக்குப் போய், எம்.ஜி.ஆர் பெயரில் அர்ச்சனை செய்துவிட்டு , அந்த பிரசாதம் பூ ஆகியவற்றை வாங்கிக் கொண்டு பொது மருத்துவமனைக்கு போனார்.எம்.ஜி.ஆருக்கு அறுவைச் சிகிச்சை முடிந்து தையல் பிரிக்கப்பட்டு முதல் மாடி வராந்தாவின் கடைசி அறையில் தங்கவைக்கப்பட்டு இருந்தார்.அந்த அறை உட்புறமாகத் தடுக்கப்பட்டு இருந்தது அதில் வெளிபக்கத்தில் எம்.ஜி.ஆர் படுத்திருக்க,உள்ளே ஜானகி இருந்திருக்கிறார்.கதவுக்கு வெளியே எம்.ஜி.ஆரின் அண்ணன் சக்கரபாணி காவலுக்கு அமர்ந்திருந்தாராம்..உள்ளே போய் எம்.ஜி.ஆரைப் பார்த்த தேவர் அகத்தியர் கோவில் குருக்கள் கொடுத்த பூவை அவர் கழுத்தில் மாலையாகப் போட்டு,திருநீரை அவர் வாயில் தூவி குங்குமத்தை நெற்றியில் இட்டிருக்கிறார்.

எட்டாவது வள்ளல் எம்.ஜி. ஆர். அவருக்கே அள்ளிக்கொடுத்த சாண்டோ சின்னப்பா தேவர்

எம்.ஜி.ஆர் அந்த நிலையிலும் சிரித்தபடி தன் கையை  மடக்கி தேவர் வயிற்றில் ‘ பாக்ஸர் ‘ ஸ்டைலில் ஒரு குத்துவிட்டாராம்.இருவரும் கட்டிப் பிடித்தபடி கட்டிலில் அமர்ந்து கொண்டு கையில் ஒரு பேனாவை எடுத்துக்கொண்டு,அதை ரிவால்வாராகப்  பாவித்து தன்னை ராதா எப்படி சுட்டார் என்பதை தேவருக்கும் , அவருடன் வந்தவர்களுக்கும் நடித்து காட்டி விளக்கினாராம்.

சரியாகப் பேச வராததால் குழறிய மொழியில்தான் எம்.ஜி.ஆர் .பேசி இருக்கிறார்.’ ஹால்ல நானும் பெற்றால்தான் பிள்ளையா பட புரடியூசர் வாசுவும் எதிர் எதிர்ல உக்காந்து பேசிக்கிட்டு இருந்தோம்.ராதா அண்ணன் ( தன்னை கொல்ல  முயன்ற பிறகும் அண்ணன் என்றுதான் சொன்னாராம்.) தன் இடுப்புல கை வச்சிக்கிட்டு ,அப்பப்ப வயிற்றைத் தடவியபடி முன்னும் பின்னும் நடந்தபடி இருந்தார்.ஏன் நிக்கறீங்க உக்காருங்க அண்ணேனு சொன்னேன்.அதுக்கு ராதா அண்ணன் மத்தியானம் வாசு வீட்டுல கீரைக்குழம்பு சாப்பிட்டேன்.அது வயித்த என்னமோ பண்ணுதுனு சொன்னாரு.நான் வாசு முகத்தையே பாத்து பேசிக்கிட்டு இருந்தேன்’.என்றபடி தனது கையில் இருந்த பேனாவை தன் வலது காதில் வைத்துக்காட்டி,’அப்போ இப்படி காதுல எதையோ வைக்கறமாதிரி இருந்தது.ராமசந்திரா அப்படியே டக்குனு திரும்புனு ராதா அண்ணன் சொன்னாரு.நான் திரும்பவும் துப்பாக்கி என் காதில் இருந்து நழுவி கழுத்துப் பக்கம் வந்திடுச்சு. அப்ப துப்பாக்கி வெடிச்சிட்டுது.உடனே நான் அண்ணேனு கத்திக்கிட்டே சோபாவுக்கு பின்னாடி தாவி உக்காந்துட்டேன்.

அப்போ புரடியூசர் வாசு ராதா அண்ணன்கிட்ட இருந்து துப்பாக்கிய பிடுங்க  முயற்சி பண்ணிகிட்டு இருந்தாரு.நான் காத பொத்திக்கிட்டு ரத்தம் வழிய வெளியே ஓடிவந்து கார்ல உக்காந்துட்டேன்.கார் நேரா ஜி.ஹெச்சுக்கு வந்துட்டுது அதுக்கப்புறம் அங்க என்ன நடந்தது என்று எனக்குத் தெரியாது’ என்று சொல்லி இருக்கிறார்.

அன்றிலிருந்து தினந்தோறும் கோவில் பிரசாதத்துடன் எம்.ஜி.ஆரைப் போய் பார்த்திருக்கிறார் தேவர்.அதோடு அவ்வப்போது கட்டுக் கட்டாகப் பணமும் கொடுத்திருக்கிறார்.இதைப் பார்த்த அவரது தம்பியும் இயக்குநருமான திருமுகம் ” இவ்வளவு பணம் குடுக்கறீங்களே,அவருக்கு திடீர்னு எதாவது ஆயிட்டா”  என்று கேட்டாராம் …அதற்கு தேவர், தன் தலை முடியைத் தொட்டுக் காட்டி , இது போச்சுனு நினச்சுக்குவேன்.அவர வச்சு படம் எடுக்காத  வரைக்கும் கைக்கும் வாய்க்குமாத்தான இருந்துது,இதெல்லாம் அவரால வந்ததுதான?,படத்துக்குப் பத்தாயிரம் சம்பளம் அதிகாம குடுத்ததா நினச்சுக்குவேன்” என்றாராம்.அன்று தயாரிப்பாளர்களும் ஹீரோவாக இருந்திருக்கிறார்கள் போல.!.

Share this story