எனக்கு ஒரு ஆண் நண்பர் வேண்டும் ! 4 பேர் கிடைத்துவிட்டால் யாரை விரட்டுவது? – திஷா

எனக்கு ஒரு ஆண் நண்பர் வேண்டும் ! 4 பேர் கிடைத்துவிட்டால் யாரை விரட்டுவது? – திஷா

நடிகை திஷா தனக்கு ஆண் நண்பர் ஒருவர் மட்டும் வேண்டும் என்றும், 4 பேரை கிடைத்துவிட்டால் மற்றவர்களை எப்படி புறக்கணிப்பது என்றும் டிக்டோக் வீடியோவில் பேசியிருக்கிறார்.

கொரோனா அச்சம் காரணமாக நாடெங்கும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், பலர் டிக்டோக்கில் வீடியோக்களை பதிவிட்டு நேரத்தை செலவிட்டு வருகின்றனர். இதேபோல் திரைநட்சத்திரங்களும், டிக்டோக்கில் வீடியோ பதிவிட்டு ரசிகர்களை அவ்வப்போது மகிழ்வித்து வருகின்றனர். சமீபத்தின் நடிகை திஷாவின் வேடிக்கையான டிக்டோக் வீடியோ வெளிவந்துள்ளது. அவரது வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.

[video:https://www.tiktok.com/@dishapatani/video/6823302301017459970]
திஷா தனது அதிகாரப்பூர்வ டிக்டோக் கணக்கில் ஒரு வீடியோ பகிர்ந்துள்ளா. அதில்  “எனக்கு ஒரு ஆண் நண்பன் வேண்டும். ஆனால் கடவுள் எனக்கு நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட ஆண் நண்பர்களைக் கொடுத்தால், நான் யாரை புறக்கணிக்க வேண்டும்?” என பதிவிட்டுள்ளார். இது போன்ற வீடியோக மிகவும் வேடிக்கையானது. திஷா இப்படி பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் பிரபலமாகி வருகிறது, மேலும் மக்கள் அவரை மிகவும் பாராட்டுகிறார்கள். இந்த வீடியோவில் கூந்தல் விரித்தபடி திஷா மிகவும் அழகாக இருக்கிறார். இது முதல் முறை அல்ல, ஆனால் இதற்கு முன்பே அவரது வீடியோக்கள் பெரும்பாலும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

[video:https://www.instagram.com/p/B_U43uygafF/?utm_source=ig_web_copy_link]
சமீபத்தில் இன்டர்வியூ அளித்திருந்த திஷா, ஊரடங்கு காரணமாக வீட்டிலேயே இருப்பதால் சலிப்பாக இருப்பதாக பேசியிருந்தார். இவர் விரைவில் ‘ராதே: யுவர் மோஸ்ட் வாண்டட் பாய்’ படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் சல்மான் கான், ரன்தீப் ஹூடா மற்றும் ஜாக்கி ஷெராப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர்.

Share this story