எனக்கு சிகரெட், புகையிலை புகைவாசனை பிடிக்கும் – ஸ்ருதிஹாசன்

எனக்கு சிகரெட், புகையிலை புகைவாசனை பிடிக்கும் – ஸ்ருதிஹாசன்

நடிகர் கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசனை திறமையான நடிகையாக உலகம் அறியும். அதே சமயத்தில் அவர் ஒரு பாடகி, இசை அமைப்பாளர் மற்றும் இசைக்கலைஞர் என்பது உங்களுக்குத் தெரியுமா?

[video:https://www.instagram.com/p/B_AztnshPI2/?utm_source=ig_web_copy_link]

தெலுங்கு திரையுலகில் அனகனகா ஓ தீருடு என்ற படத்தில் அறிமுகமானார் ஸ்ருதி ஹாசன். படம் சரியாக ஓடாவிட்டாலும், அவரது நடிப்பு நிறைய கைதட்டல்களைப் பெற்றது. கப்பார் சிங் என்ற அதிரடி படத்தில் பவர் ஸ்டார் பவன் கல்யாண் உடன் ஸ்ருதிஹாசன் நடித்தார். இது பாக்ஸ் ஆபிஸில் பிளாக்பஸ்டராக இருந்தது. தென்னிந்திய திரையுலகின் சிறந்த நட்சத்திரங்களின் எண்ணிக்கையில் இடம்பிடித்தார் ஸ்ருதிஹாசன். சமீபத்தில் ஸ்ருதிஹாசன் பேசும்போது, சிகரெட் மற்றும் புகையிலை வாசனையை விரும்புவதாக கூறியது அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியைக் ஏற்படுத்தியது.

எனக்கு சிகரெட், புகையிலை புகைவாசனை பிடிக்கும் – ஸ்ருதிஹாசன்
மேலும் தனக்கு ரோஜா, பென்சில், சாக்லேட், சிகரெட் மற்றும் புகையிலை வாசனை பிடிக்கும். ஆனாலும் மக்கள் சிகரெட் புகைக்கும்போது அந்த வாசனை எனக்குப் பிடிக்கவில்லை என பேசி மழுப்பினார்.

[video:https://www.instagram.com/p/B-rfEChBANs/?utm_source=ig_web_copy_link]

கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில், ஸ்ருதிஹாசன் தான் விஸ்கியை பெரிதும் விரும்புவதாக ஒப்புக்கொண்டிருந்தார். ஆனால் அந்த பழக்கத்தை பின்னர் நிறுத்திவிட்டார். அதே சமயம் மக்கள் தன்னுடைய நடிப்பு திறனைத்தான் பார்க்கிறார்களே தவிர தன்னுடைய தனிப்பட்ட விஷயங்களை பற்றி கவலைப்படவில்லை என்று தெளிவுபடுத்தி இருந்தார்.
தமிழில் ஸ்ருதிஹாசன் நடித்த 7ம் அறிவு படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்திருந்தது.

Share this story