“என்னை பெண்ணாக உணர வைக்கும் ஆண் காதலனாக வேண்டும்!” – திஷா பதானி பேட்டி

“என்னை பெண்ணாக உணர வைக்கும் ஆண் காதலனாக வேண்டும்!” – திஷா பதானி பேட்டி

தன்னை பெண்ணாக உணர வைக்கும் ஆண் காதலனாக வேண்டும் என பிரபல பாலிவுட் நடிகை திஷா பதானி கூறியுள்ளார்.

மும்பை: தன்னை பெண்ணாக உணர வைக்கும் ஆண் காதலனாக வேண்டும் என பிரபல பாலிவுட் நடிகை திஷா பதானி கூறியுள்ளார்.

வசீகரிக்கும் கவர்ச்சியான உடல்வாகையும், பொலிவான சருமத்தையும் ஒருசேர கொண்டிருக்கும் அழகான பாலிவுட் நடிகை திஷா பதானி. அத்லெடிக் உடலமைப்பை பெற்றிருந்தாலும் உணர்வுரீதியாக மென்மையான காதல் மனதை இவர் கொண்டிருக்கிறார் என்பது திஷா பதானியின் சமீபத்திய பேட்டியில் தெரிய வந்துள்ளது. வருகிற 7-ஆம் தேதி ‘மலங்’ திரைப்படம் உலகெங்கும் ரிலீசாக உள்ளது. இப்படத்தில் ஆதித்ய ராய் கபூர், அனில் கபூர், குணால் கெம்மு உள்ளிட்ட நட்சத்திரங்களுடன் திஷா பதானியும் நாயகியாக நடித்துள்ளார். இந்தப் படம் தொடர்பாக அண்மையில் பிங்க்வில்லா.காம் என்ற இணையதளத்திற்கு அவர் பேட்டி அளித்தார்.

“என்னை பெண்ணாக உணர வைக்கும் ஆண் காதலனாக வேண்டும்!” – திஷா பதானி பேட்டி

அப்போது காதல் குறித்து திஷா பதானியிடம் கேட்கப்பட்டது. அப்போது அவர் பேசுகையில், “காதல் மிகவும் முக்கியமானது. அது ஒரு உந்து சக்தியாகும். வாழ்க்கையில் நீங்கள் செய்யும் அனைத்தும் அன்பிற்காகவோ அல்லது அன்பின் காரணமாகவோ இருக்கும். காதல் இல்லாமல் எப்படி வாழ முடியும்?” என்றார். முதல் பார்வையிலேயே காதல் கொள்ளுவது பற்றி திஷா பதானி கூறுகையில், “முதல் பார்வையில் நானும் காதலில் விழுந்துள்ளேன். என்னைப் பொறுத்தவரை, காதலிப்பது மிகவும் முக்கியம். முதல் நாளில் கிடைக்கும் அந்த காதல் பட்டாம்பூச்சிகளின் உணர்வை நான் விரும்புகிறேன். ரிலேஷன்ஷிப்பில் இருக்கும்போது தான் நான் பெண்ணாக உணர்வேன். என்னை பெண்ணாக உணர வைக்கும் காதலனுக்காக எதிர்பார்த்து காத்திருக்கிறேன்” என்றார்.

Share this story