என்.டி.ராமாராவ் பயோபிக்கில் ஸ்ரீதேவியாக நடிக்கும் பிரபல நடிகை யார் தெரியுமா? சுவாரஸ்ய தகவல்

என்.டி.ராமாராவ் பயோபிக்கில் ஸ்ரீதேவியாக நடிக்கும் பிரபல நடிகை யார் தெரியுமா? சுவாரஸ்ய தகவல்

மறைந்த ஆந்திர முதல்வரும் நடிகருமான என்.டி.ராமாராவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் ஸ்ரீதேவியாக நடிக்க பிரபல நடிகை ராகுல் ப்ரீத் சிங் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

அமராவதி: மறைந்த ஆந்திர முதல்வரும் நடிகருமான என்.டி.ராமாராவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் ஸ்ரீதேவியாக நடிக்க பிரபல நடிகை ராகுல் ப்ரீத் சிங் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

மறைந்த தெலுங்கு நடிகரும் முன்னாள் ஆந்திர முதல்வருமான என்.டி.ராமாராவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான தயாரிக்கப்பட்டு வருகிறது. தேஜா இயக்கும் இப்படத்தில், என்.டி.ஆரின் கதாப்பாத்திரத்தில் அவரின் மகன் நந்தமுரி பாலகிருஷ்ணா நடிக்க, அவரின் மனைவியாக வித்யா பாலன் நடிக்கிறார்.

அதேபோல், என்.டி.ஆரின் மருமகனான சந்திரபாபு நாயுடு கதாப்பாத்திரத்தில் ராணாவும், அவரின் மனைவியாக மஞ்சிமா மோகனும் நடிக்கின்றனர்.

அதுமட்டுமின்றி, சாவித்திரியாக நித்யா மேனன் என பலர் நடிக்கும் இப்படத்தில் ஸ்ரீதேவி கதாப்பாத்திரத்தில் யாரை நடிக்க வைப்பது என பெரும் விவாதமே நடைபெற்றுள்ளது.

என்.டி.ராமாராவ் பயோபிக்கில் ஸ்ரீதேவியாக நடிக்கும் பிரபல நடிகை யார் தெரியுமா? சுவாரஸ்ய தகவல்

இறுதியாக பிரபல நடிகை ராகுல் ப்ரீத் சிங்கை படக்குழுவினர் ஒப்பந்தம் செய்துள்ளனர். இதைச் சவாலாக ஏற்றுள்ள ராகுல், ஸ்ரீதேவியின் உடல்மொழி, முக பாவனைகள் ஆகியவற்றைத் தெரிந்துகொள்ள அவர் நடித்த படங்களைப் பார்த்து வருகிறார். மேலும், ஸ்ரீதேவிக்கு நெருக்கமானவர்களிடம் அவரைப் பற்றி முழுமையாகத் தெரிந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சினிமா வாழ்க்கை, அரசியல் வாழ்க்கை என இரண்டு பாகங்களாக தயாராகி வரும் இப்படம், வருகின்ற 2019 ஜனவரி மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

Share this story