ஏசி அறையில் அமர்ந்து டிவிட் செய்வதன் மூலம் புலம் பெயர்ந்தோருக்கு உதவ முடியாது – சோனு சூட்

ஏசி அறையில் அமர்ந்து டிவிட் செய்வதன் மூலம் புலம் பெயர்ந்தோருக்கு உதவ முடியாது – சோனு சூட்

சினிமாவில் மட்டுமே கதநாயகர்களாக பலர் வலம் வரும் நிலையில் ஊரடங்கு காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக உண்மையான கதநாயாகனா வலம் வருகிறார் சோனு சூட்.
“புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் கவலைப்பட வேண்டாம் அவர்களுக்காக சோனு சூட் இருக்கிறார் என்று சமூக வலைதளங்களில் தொடர்ந்து பாராட்டப்பட்டு வருகிறார் சோனு சூட்..கடந்த இரண்டு மாதங்களாக, ‘சோனு சூட் தனது சொந்த ஹோட்டலை சுகாதாரப் பணியாளர்கள் பயன்படுத்திக் கொள்ள வழங்கி உள்ளார். ‘சோனு சூட் வறுமையில் வாடுபவர்களுக்கு உணவு வழங்கி வருகிறார்.,

[video:https://www.instagram.com/p/B4-EI7KAD8j/?utm_source=ig_web_copy_link]

‘ரம்ஜான் காலத்தில் 25,000 க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோருக்கு சோனு சூட் உணவளித்து பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறார். அண்மையில், மகாராஷ்டிரா மற்றும் கர்நாடக அரசாங்கங்களிடமிருந்து அனுமதி பெற்று புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு கொண்டு செல்ல பேருந்துகள் ஏற்பாடு செய்தார்.

[video:https://www.instagram.com/tv/B_wby3cA0X0/?utm_source=ig_web_copy_link]
இது குறித்து அவர் தெரிவிக்கையில், “புலம்பெயர்ந்தோருக்கு உதவுவது நமது கடமை என்று நான் உணர்கிறேன். புலம்பெயர்ந்தோர் தங்கள் குடும்பங்கள் மற்றும் குழந்தைகளுடன் நெடுஞ்சாலைகளில் நடப்பதை பார்த்து வேதனை அடைந்துள்ளேன். அவர்கள் வேதனைகளை ஏ.சி. அறையில் அமர்ந்து ட்வீட் செய்தால் அவர்கள் பிரச்சனை தீராது என சோனு சூட் கூறினார்.

[video:https://www.instagram.com/p/B54SjJdgTjW/?utm_source=ig_web_copy_link]

மேலும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு எந்த வகையிலும் உதவுவது ஒவ்வொரு இந்தியரின் கடமையாக இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். நீங்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு ஒரு குடும்பமாக ஒன்றிணைந்து நீங்கள் ஒரு தேசமாக மாறும் காலங்கள் இவை என குறிப்பிட்டுள்ளார்.

Share this story