ஐஸ்-க்கு போட்டியாக பிக் பாஸின் செல்லக்குட்டியாக மாற விரும்பும் ரித்விகா!

ஐஸ்-க்கு போட்டியாக பிக் பாஸின் செல்லக்குட்டியாக மாற விரும்பும் ரித்விகா!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஐஸ்வர்யாவை போல தானும் பிக் பாஸின் செல்லக்குட்டியாக மாற வேண்டும் என்று ரித்விகா புது விதமான ஸ்ட்ரேட்டஜியை கையில் எடுத்துள்ளார்.

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஐஸ்வர்யாவை போல தானும் பிக் பாஸின் செல்லக்குட்டியாக மாற வேண்டும் என்று ரித்விகா புது விதமான ஸ்ட்ரேட்டஜியை கையில் எடுத்துள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் இன்னும் சில தினங்களில் நிறைவடையவுள்ளது. இறுதிப்போட்டிக்கு ஐஸ்வர்யா, ரித்விகா, ஜனனி மற்றும் விஜயலக்ஷ்மி ஆகியோர் போட்டியிடுகின்றனர். இதில் மக்களின் வாக்குகள் அடிப்படையில் ரித்விகா முதலிடத்திலும், ஐஸ்வர்யா இரண்டாவது இடத்திலும் இருக்கின்றனர்.

ஐஸ்-க்கு போட்டியாக பிக் பாஸின் செல்லக்குட்டியாக மாற விரும்பும் ரித்விகா!

இவர்களில் பிக் பாஸின் செல்லக்குட்டியான ஐஸ்வர்யாவே பிக் பாஸ் 2 டைட்டிலை தட்டிச் செல்வார் என்ற எண்ணம் பார்வையாளர்களிடமும் உள்ளது. இந்த சீசன் தொடக்கத்திலேயே, ஒரு முறை பிக் பாஸிடம் ‘ஐ லவ் யூ’ சொன்ன ஐஸ்வர்யா, தன்னை திருமணம் செய்துக் கொள்கிறீர்களா பிக் பாஸ் என்ற புரொபோசலையும் முன் வைத்திருந்தார்.

ஐஸ்-க்கு போட்டியாக பிக் பாஸின் செல்லக்குட்டியாக மாற விரும்பும் ரித்விகா!

அதிலிருந்தே, பிக் பாஸுக்கு ஐஸ் மேல ஒரு கண்ணு எனலாம். பிக் பாஸ் வீட்டை ரணகளப்படுத்தியும், பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியும், ஐஸ்வர்யாவை தொடர்ந்து பிக் பாஸ் காப்பாற்றிக் கொண்டே வருகிறார். அதனால், இந்த சீசனின் டைட்டிலையும் ஐஸ்வர்யா தட்டிச் செல்ல வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது.

ஐஸ்-க்கு போட்டியாக பிக் பாஸின் செல்லக்குட்டியாக மாற விரும்பும் ரித்விகா!

இந்நிலையில், பிக் பாஸின் அன்பை பெற்றால் தானுது டைட்டிலை எளிதாக வென்றிடலாம் என்ற நோக்கில், ரித்விகாவும் பிக் பாஸிற்கு ஐஸ் வைக்க தொடங்கியுள்ளார். இதுவரை ஐஸ் மட்டுமே பிக் பாஸ் புராணம் பாடி வந்த நிலையில், தற்போது அவருக்கு போட்டியாக ரித்விகாவும் பிக் பாஸ் புகழ் பாடி வருகிறார்.

பிக் பாஸ் வீட்டின் மருமகளான ஐஸ்வர்யாவை வீழ்த்த தலைகீழாக நின்று தண்ணீர் குடித்தாலும் பிக் பாஸின் செல்லக்குட்டியாக ரித்விகா மாற முடியாது என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

 

 

Share this story