ஒன்றரை கோடி இதயங்களை வென்ற ஸ்ருதி ஹாசன்!

ஒன்றரை கோடி இதயங்களை வென்ற ஸ்ருதி ஹாசன்!

கொரோனா வந்ததில் பலர் பாதிக்கப்பட்டிருக்கலாம். ஆனால் இந்த லாக்டவுன் செலிபிரிட்டிகளுக்கு ஒரு  நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது. இதைப் பயன்படுத்தி ரசிகர்களிடம்   நேரலை செய்து  பல பாலோவ்ர்களை  கவர்ந்து வருகின்றனர். 

நடிகை ஸ்ருதி ஹாசன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்  ஒரு உற்சாகப் பதிவிட்டுள்ளார்.  எதற்காக தெரியுமா? ஸ்ருதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு 14 மில்லியன் பாலோவர்களை பெற்றுள்ளார். 

இது குறித்துப் பதிவிட்ட ஸ்ருதி “எனது 14 மில்லியன் இன்ஸ்டாகிராம் குடும்ப அன்பர்களுக்கு ஒரு சூப்பர் சீஸி நன்றி! நான் உங்கள் அனைவரையும் நேசிக்கிறேன், அன்றாடம் நீங்கள் எனக்குக் காட்டும் அனைத்து அன்பிற்கும் நான் மிகவும் நன்றியுள்ளவளாக இருக்கிறேன். வரலாற்றில் இது ஒரு விசித்திரமான நேரம் மற்றும் நம் ஒவ்வொருவருக்கும் பல வித்தியாசமான உணர்ச்சிகள் இருக்கும். உங்கள் அனைவருடனும் நட்பில் இருந்தது மற்றும் எனது வாழ்க்கை நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.” என்று தெரிவித்துள்ளார்.

Share this story