ஒய்யாரமாக சுற்றும் கரீனா கபூர் ! இன்ஸ்டாகிராமில் கிலுகிலு வீடியோ !!

ஒய்யாரமாக சுற்றும் கரீனா கபூர் ! இன்ஸ்டாகிராமில் கிலுகிலு வீடியோ !!

ஊரடங்கு காரணமாக வீட்டில் முடங்கி உள்ள பாலிவுட் நடிகை கரீனா கபூர் அவ்வப்போது வீடியோ வெளியிட்டு வந்த நிலையில் தற்போது ரசிகர்களை உசுப்பேத்தும் வகையில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.

[video:https://www.instagram.com/p/B_YM3L5h-gE/?utm_source=ig_web_copy_link]
ஸ்லோமோஷனில் உருவாக்கப்பட்டுள்ள இந்த வீடியோவில், மஞ்சள் கஃப்தான் அணிந்துகொண்டு ஒரு சுற்று சுற்றுகிறார். அதை பார்க்கும்போது சினிமாவில் கதாநாயகி இன்ட்ரடக்ஷன் வரும காட்சிப் போலவே உள்ளது. அந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் பார்க்கும் ரசிகர்கள் ராணி போல இருப்பதாக பாராட்டி, அந்த வீடியோவை ஷேர் செய்து வருகின்றனர்.

ஒய்யாரமாக சுற்றும் கரீனா கபூர் ! இன்ஸ்டாகிராமில் கிலுகிலு வீடியோ !!

மேலும் தனிமையில் உள்ள சைஃப் அலிகான், தைமூர் அலிகான் போன்வர்கள் படங்களை பதிவிட்டு வருகிறார் கரீனா கபூர். வீட்டில் நடனம் ஆடுவது, ஓவியம் வரைவது என மனதுக்குப் பிடித்த செயல்களை செய்து வரும் கரீனா கபூர், இந்த சமயங்களில் அன்புக்குரியவர்களிடம் நேரத்தை செலவிட வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளார்.

[video:https://www.instagram.com/p/B_YMR6bBxXR/?utm_source=ig_web_copy_link]

கடைசியாக கரீனா கபூர் அங்கிரேசி மீடியம் (ஆங்கில வழிக்கல்வி) என்ற படத்தில் இர்பான் கான் மற்றும் ராதிகா மதனுடன் நடித்திருந்தார். மேலும் அவர் நடித்த தக்த் என்ற படம் மே மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. கரண் ஜோஹர் இயக்குநர் இயக்கும் இந்த படத்தில் ரன்வீர் சிங், கரீனா, கபூர், ஆலியா பட், விக்கி கவுசல், பூமி பட்னேகர், ஜான்வி கபூர்  மற்றும் அனில் கபூர் ஆகியோர் நடித்துள்ளனர்.

Share this story