கங்கணாவின் அடுத்த(தும்) ஆக்சன் ஹீரோ(யின்) கதை!

கங்கணாவின் அடுத்த(தும்) ஆக்சன் ஹீரோ(யின்) கதை!

ரஜனீஷ் காய் இயக்கத்தில் உருவாக இருக்கும் இந்தபடம் குறித்து கங்கணா கூறும்போது, “தாக்ட் படம் என்னுடைய சினிமா கரீயரில் மிக முக்கிய இடத்தைப் பிடிக்கும், இந்தப்படம் வெற்றியடைந்தால், அது பெண்களை சூப்பர்ஹீரோக்களாக காட்டக்கூடிய கதைகளுக்கு வழிகாட்டியதாய் இருக்கும்” என்றிருக்கிறார்.

“மேடம், ஒரு ஹீரொயின் ஓரியண்டட் சூப்பர் ஆக்சன் கதை இருக்கு, கேக்குறீங்களா” என பாலிவுட் இயக்குநர்கள் யாராவது கங்கணா ரனாவத்திடம் கதை சொல்ல ஆரம்பிக்கும்போதே, கால்ஷீட் கொடுத்துவிடுகிறாராம் கங்கணா. பெண் ஹீரோவை மையப்படுத்தி சொல்ல வருகிற கதைகளை அவ்வளவு ஆர்வத்துடன் கேட்டு வருகிறார். மணிகர்னிகா படத்தின் வெற்றியும் இதற்கு காரணம் என்றால் அது மிகையல்ல. அடுத்த வருட துவக்கத்தில் ஷூட்டிங் கிளம்பி, தீபாவளிக்கி ரிலிசாக இருக்கும் ‘தாக்ட்’ படத்தின் முதல் பார்வை, அதாவது ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு செய்தியை உறுதிபடுத்தி இருக்கிறார் கங்கணா!

கங்கணாவின் அடுத்த(தும்) ஆக்சன் ஹீரோ(யின்) கதை!

ரஜனீஷ் காய் இயக்கத்தில் உருவாக இருக்கும் இந்தபடம் குறித்து கங்கணா கூறும்போது, “தாக்ட் படம் என்னுடைய சினிமா கரீயரில் மிக முக்கிய இடத்தைப் பிடிக்கும், இந்தப்படம் வெற்றியடைந்தால், அது பெண்களை சூப்பர்ஹீரோக்களாக காட்டக்கூடிய கதைகளுக்கு வழிகாட்டியதாய் இருக்கும்” என்றிருக்கிறார். கையில் நவீன ரக துப்பாக்கிகளோடு கங்கணா இருக்கும் ஆக்சன் பின்புலத்தோடு ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி இருக்கிறது.

Share this story