கஜா புயல் பாதிப்புக்கு குரல் கொடுத்த அமிதாப் பச்சன்: கமல்ஹாசன் நன்றி!

கஜா புயல் பாதிப்புக்கு குரல் கொடுத்த அமிதாப் பச்சன்: கமல்ஹாசன் நன்றி!

கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவ நாட்டு மக்கள் முன் வர வேண்டும் என பாலிவுட் நடிகர் அமிதா பச்சன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை: கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவ நாட்டு மக்கள் முன் வர வேண்டும் என பாலிவுட் நடிகர் அமிதா பச்சன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சோறுடைத்த சோழ நாடு என பெயர் பெற்ற டெல்டா மாவட்டங்கள் தற்போது சோறில்லாமல் இருந்து வருகின்றன. கடந்த நவ.15ம் தேதி கோரத்தாண்டவம் ஆடிய கஜா புயலில் சிக்கி 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். கஜா புயலினால் வீடு, வயல், கால்நடைகளை இழந்து தவிக்கும் டெல்டா மாவட்ட மக்களுக்காக அரசு, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், நடிகர்கள், அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள் உட்பட ஏராளமானோர் நிவாரணம் வழங்கி வருகின்றனர்.

கஜா புயல் பாதிப்புக்கு குரல் கொடுத்த அமிதாப் பச்சன்: கமல்ஹாசன் நன்றி!

இந்நிலையில்ல், பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், நடிகர் கமல்ஹாசனின் வேண்டுகோளை ஏற்று வீடு, விவசாய நிலங்களை பறிகொடுத்துள்ள டெல்டா மாவட்ட மக்களுக்கு நாட்டு மக்கள் உதவ முன் வர வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார். நாட்டின் ஒற்றுமையை உணர்த்தவௌம், சகோதரத்துவம், மனிதாபிமானத்தை வெளிப்படுத்த கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுங்கள் என கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும், கஜா புயல் ஏற்படுத்திய தாக்கத்தையும், தமிழகத்தையே புரட்டிப் போட்டது குறித்து தெளிவாக எடுத்துரைத்த நடிகர் அமிதாப் பச்சனுக்கு, மக்கள் நீதி மய்யம் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் நன்றி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கமல்ஹாசன் தனது ட்விட்டரில், ‘அமித் ஜி நன்றி. கஜா புயலின் பாதிப்பை மிகத் தெளிவாக எடுத்துரைத்துள்ளீர்கள். பன்முகத்தன்மை கொண்ட இந்த தேசத்தை ஒருசேர இணைக்கும் பணியை தங்களை போன்றவர்காள் சிறப்பாக செய்து வருகிறீர்கள்’ என பதிவிட்டு, அமிதாப் பேசிய வீடியோவையும் பகிர்ந்துள்ளார்.

Share this story