கடைசியில் பாலகிருஷ்ணா ஜோடி இவர்தானா!

கடைசியில் பாலகிருஷ்ணா ஜோடி இவர்தானா!

தெலுங்கு சினிமாவில் பாலகிருஷ்ணா,சிரஞ்சீவி போன்ற சீனியர்களுக்கு கதை எழுதுவதை விட கதாநாயகியைத் தேடுவது அதிக கஷ்டமாகிவிட்டது. சிரஞ்சீவியுடன் நடிக்க திரிஷா மறுத்தது போலவே பல முன்னணி நாயகிகள் பாலகிருஷ்ணாவை ரிஜக்ட் செய்து வருகிறார்கள். கடைசியாக அஞ்சலியைப் பிடித்தார்கள்.

கடைசியில் பாலகிருஷ்ணா ஜோடி இவர்தானா!

ஆனால் பாலகிருஷ்ணாவுக்கு ஒரு ஹீரோயின் போதுமா, சோனாக்‌ஷி சின்ஹாவில் துவங்கி எங்கெங்கோ முட்டி மோதிப்பார்த்த இயக்குநர் போயபட்டி சீனுவிடம்  கடைசியாக சிக்கியவர் பாயல் ராஜ்புத்!. ஆர்எக்ஸ் 100 படத்தில் வந்து கலக்கிய அதே பாயல்தான். அவரிடம் உள்ள நல்ல குணம் சம்பளம் தாராளமாக இருந்தால் உடையில் சிக்கனமாக இருப்பார் என்பதே.

கடைசியில் பாலகிருஷ்ணா ஜோடி இவர்தானா!

என்ன செய்ய இதே போயப்பட்டி சீனு, அதே பாலையா என்கிற பாலகிருஷ்ணாவை வைத்து சிம்ஹா, லிஜெண்ட் என்று இரண்டு சூப்பர் ஹிட்டுகள் கொடுத்தவர்தான், ஆனால் அது பத்துவருசம் முன்பு.

Share this story