கமல்ஹாசனுக்கும், மோகன்லாலுக்கும் என்ன வித்தியாசம்… த்ரிஷ்யம் இயக்குனர் சொன்ன தகவல்!

கமல்ஹாசனுக்கும், மோகன்லாலுக்கும் என்ன வித்தியாசம்… த்ரிஷ்யம் இயக்குனர் சொன்ன தகவல்!

த்ரிஷ்யம் படத்தின் இயக்குனர் ஜீத்து ஜோசப் நடிகர்கள் கமல்ஹாசனுக்கும், மோகன்லாலுக்கும் இடையே உள்ள வித்தியாசம் பற்றி மனம் திறந்துள்ளார்.

2013 ஆம் ஆண்டு மலையாளத்தில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான த்ரிஷ்யம் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. அதையடுத்து பல மொழிகளில் இப்படம் ரீமேக் ஆக தமிழில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கமல்ஹாசன் மற்றும் கவுதமி நடிப்பில் ‘பாபநாசம்’ என்ற பெயரில் ரீமேக் ஆனது.

மலையாளம் மற்றும் தமிழ் இரண்டிலும் மோகன்லால், கமல்ஹாசன் கதாபாத்திரங்களில் சிறிய மாற்றத்தைச் செய்திருந்தனர். இருவருக்கும் தங்கள் குடும்பத்தை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்ற வெறி இருக்கும். அதே நேரத்தில் மோகன்லாலுக்கு அந்த கொலைக்காக குற்ற உணர்ச்சி இருக்காது. ஆனால் கமல்ஹாசன் தாங்கள் செய்தது தவறு என்ற குற்ற உணர்ச்சியை கிளைமேக்சில் வெளிப்படுத்துவார்.

மோகன்லாலின் தரமான செய்கை… சிறப்பான இரண்டாம் பாகம்… த்ரிஷ்யம் 2 விமர்சனம்!

தற்போது ஜீத்து ஜோசப் இருவருக்குமிடையே உள்ள வித்தியாசத்தைப் பற்றிக் கூறும் போது “மோகன்லால் ஒரு பிறவி நடிகர், அதே சமயத்தில் கமல்ஹாசன் நடிப்புக் கலையை முழுதாக பயின்றவர. மோகன்லால் இயல்பிலே நடிப்பு வருவதால் எந்தக் கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு பொருந்திக் கொள்வார். அதே நேரத்தில் கமல்ஹாசன் அந்தக் கதாபாத்திரத்தில் இயல்பை அப்படியே கொண்டு வரும் திறமையாக நடிப்பார்” என்று தெரிவித்துள்ளார்.”

த்ரிஷ்யம் படத்தின் மூன்றாம் பாகம் உருவாக்கும் திட்டமிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Share this story