காக்க வைத்த இளம் ஹீரோ… கண்ணீர் வடிக்கும் இயக்குனர்..!

காக்க வைத்த இளம் ஹீரோ… கண்ணீர் வடிக்கும் இயக்குனர்..!

ஆள் பார்ப்பதற்கு ‘மிருகத்தனமாக ‘ இருந்தாலும் கொஞ்சம் சாஃப்ட்டான ஹீரோதான் அவர். ‘ஈர’ மனசுள்ள இயக்குனர் ஒருவரிடம் எனக்கு செட்டாகிற மாதிரி ஒரு நல்ல கதை இருந்தால் சொல்லுங்க என்று கேட்டிருக்கார். இயக்குனரும் சொல்லியிருக்கிறார். கதையைக் கேட்ட ஹீரோ, இயக்குனரைக் கட்டிப்பிடித்து கன்னத்தில் முத்தமெல்லாம் கொடுத்து, ‘ஜி.. அப்பாகிட்ட சொல்லி நானே தயாரிக்கிறேன். அடுச்சு தூள் கிளப்பிடுவோம்..’ என்று உற்சாகம் பொங்கச் சொல்லி, வாசல் வரை வந்து இயக்குனரை வழியனுப்பி வைத்திருக்கிறார் அந்த ஹீரோ.

ஆள் பார்ப்பதற்கு கொஞ்சம் ‘மிருகத்தனமாக ‘ இருந்தாலும் கொஞ்சம் சாஃப்ட்டான ஹீரோதான் அவர். ‘ஈர’ மனசுள்ள இயக்குனர் ஒருவரிடம் எனக்கு செட்டாகிற மாதிரி ஒரு நல்ல கதை இருந்தால் சொல்லுங்க  என்று கேட்டிருக்கார். இயக்குனரும் சொல்லியிருக்கிறார். கதையைக் கேட்ட  ஹீரோ, இயக்குனரைக் கட்டிப்பிடித்து கன்னத்தில் முத்தமெல்லாம் கொடுத்து, ‘ஜி.. அப்பாகிட்ட சொல்லி நானே தயாரிக்கிறேன். அடுச்சு தூள் கிளப்பிடுவோம்..’  என்று உற்சாகம் பொங்கச் சொல்லி, வாசல் வரை வந்து இயக்குனரை வழியனுப்பி வைத்திருக்கிறார் அந்த ஹீரோ.

cinema

 
இயக்குனரும் கதையை மெருகேற்றும் பணியில் ஈடுப்பட்டிருக்கிறார். அவ்வப்போது ஹீரோ சொல்லும் ஆட்களுக்கும் கதையைச் சொல்லியிருக்கிறார் இயக்குநர். இப்படியே ஒரு வருடம் ஹீரோ கைகாட்டும் நபர்களிடம் கதை சொல்லிச் சொல்லியே நாக்கு தள்ளிவிட்டது இயக்குனருக்கு. ஆனாலும் படம் தொடங்குவதற்கான எந்த அறி குறியும் ஹீரோவிடம் இல்லை. இயக்குனர் இது தொடர்பாக கேட்கும்போதெல்லாம் அடுத்த மாதம், அதற்கடுத்த மாதம் என்று நாளைக் கத்தியபடியே இருந்திருக்கிறார் அந்த ஹீரோ. 
 
எப்படியும் படம் பண்ணிவிடலாம் என்று ஹீரோ கொடுத்த நம்பிக்கையால் வேறொரு ஹீரோவுக்கு சொன்ன கதையையும் படமாக  எடுக்க முடியாமல் தவித்திருக்கிறார் இயக்குனர். வெளிப்படத்தையும் இயக்க முடியாமல் அந்த ஹீரோ படத்தையும் எடுக்க முடியாமல் திண்டாடியிருக்கிறார். இப்படியே மூன்று ஆண்டுகள் கடந்து விட்டது. அப்போதும் அந்த ஹீரோ கதையை கேட்க ஆட்களை வரவழைத்தாரே தவிர படம் எப்போது தொடங்கும் என்ற விபரத்தை மட்டும் சொல்லவில்லை. 

காக்க வைத்த இளம் ஹீரோ… கண்ணீர் வடிக்கும் இயக்குனர்..!

இதனால் வெறுத்துப்போன இயக்குனர் அந்தக்கதையை இன்னொரு ஹீரோவுக்கு சொல்ல, அவரும் சம்மதிக்க படத்தை உடனே தொடங்கி விட்டார்கள். இந்த தகவல் தெரிந்து அந்த பழைய ஹீரோவுக்கு ஈகோ முட்டிக்கொண்டது. அதெப்படி தனக்கு சொன்ன கதையை இன்னொரு ஹீரோவுக்கு சொல்லிப்  படம் எடுக்கலாம் என்று இயக்குனருக்கு போன் போட்டு கத்தியிருக்கிறார். 
 
இயக்குனர் பொறுமையாக நான் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் காத்திருந்தும் எந்த முன்னேற்றமும் இல்லாமல் இருந்தால் குடும்பத்தை நடத்துவது எப்படி என்று பதில் சொல்ல, அதை ஏற்க மறுத்த ஹிரோ தனது அப்பாவிடம் போய் அழுதிருக்கிறார். கோபத்தில் வியர்த்த அப்பா,மகன் செய்த தவறுகளை எல்லாம் மறைத்து இயக்குனர் மீது வழக்கு தொடுத்திருக்கிறார். இந்தப் பஞ்சயாத்து இயக்குனர்கள் சங்கத்திற்கு வந்திருக்கிறது.

Share this story