காதலனுடன் தீபாவளி கொண்டாடிய நயன்: பார்ட்டிக்கு வந்த திரை பிரபலங்கள்!

காதலனுடன் தீபாவளி கொண்டாடிய நயன்: பார்ட்டிக்கு வந்த திரை பிரபலங்கள்!

நடிகை நயன்தாரா விக்னேஷ் சிவனுடன்  தீபாவளியைக் கொண்டாடியுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நயன்தாராவின் படங்கள் சமீபகாலமாக தொடர் வெற்றியைப் பெற்று வருகின்றன. அறம் படம் தொடங்கி தொடர்ந்து வந்த கோலமாவு கோகிலா, இமைக்கா நொடிகள் ஆகிய இரண்டு படங்களின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் அஜித்துடன் விஸ்வாசம், ஐரா உள்ளிட்ட படங்களில்  நடித்து வருகிறார். 

இந்நிலையில் நயன்தாரா திரைத்துறையிலிருக்கும் தனது நெருக்கமான நண்பர்களுடன் தீபாவளியை கொண்டாடியுள்ளார். இதில் இயக்குநர் விக்னேஷ் சிவன், நடிகர் சிவகார்த்திகேயன், இசையமைப்பாளர் அனிருத், இயக்குநர் அட்லி, டிவி தொகுப்பாளர் திவ்யதர்ஷினி உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். இந்தக் கொண்டாட்டத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

இந்த புகைப்படங்களை பதிவிட்டிருக்கும் தொகுப்பாளர் டிடி , ‘சிறந்த மனிதர்களுடன் சேர்ந்து கொண்டாடும் போதுதான் ஒரு பண்டிகையே சிறப்பாக அமையும். இந்த ஒற்றுமை, மகிழ்ச்சி, அன்பு இன்னும் பல நாட்களுக்குத் தொடரும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Share this story