காதலர் தின ட்ரீட்… பட்டையை கிளம்பும் ‘குட்டி ஸ்டோரி’ டீசர்…

காதலர் தின ட்ரீட்… பட்டையை கிளம்பும் ‘குட்டி ஸ்டோரி’ டீசர்…

பிரபல இயக்குனர்கள் இயக்கிய ‘குட்டி ஸ்டோரி’ படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

சமீபத்தில் ஓடிடியில் வெளியான ‘சில்லுக்கருப்பட்டி’ ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதைத்தொடர்ந்து வந்த ‘பாவக்கதைகளும்’ விமர்சன ரீதியான நல்ல பெயரை பெற்றது. இதுபோன்று தமிழ் சினிமாவில் ஆந்தாலஜி படங்களின் வருகை அதிகரித்து வருகிறது.

இந்த படங்களின் வரவேற்பை தொடர்ந்து வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் ஆந்தாலஜி படம் ஒன்றை தயாரித்தள்ளது. இந்த வரிசையில் அடுத்ததாக உருவாகியுள்ள ஆந்தாலஜி படம் ‘குட்டி ஸ்டோரி’. முன்னணி இயக்குனர்களான கௌதம் வாசுதேவ் மேனன், விஜய், வெங்கட்பிரபு, நலன் குமாரசாமி ஆகியோர் இணைந்து இந்த படத்தை இயக்கியுள்ளனர்.

காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்தை கௌதம் மேனன், அமலாபால் பகுதியை கௌதம் மேனனே இயக்கியுள்ளார். விஜய் சேதுபதி, அதிதி பாலன் இணைந்து நடித்த பகுதியை நலன்குமாரசாமியும், வருண், மேகா ஆகாஷ் பகுதியை விஜய்யும், சாக்ஷி அகர்வால் பகுதியை வெங்கட்பிரபுவும் இயக்கி இருக்கிறார்கள்.

‘குட்டி ஸ்டோரி’ படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டரை, படத்தின் ப்ரோமோ ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் வரும் பிப்ரவரி 12ம் தேதி குட்டி ஸ்டோரி எனும் ஆந்தாலஜி படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்த படத்தின் டீசர் இன்று வெளியிடப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்து. அதன்படி இயக்குனர் கௌதம் மேனன், தனது சமூக வலைத்தளத்தில் குட்டி ஸ்டோரி படத்தின் டீசரை வெளியிட்டுள்ளார். இந்த டீசர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Share this story