கிக் பாக்ஸிங் செய்யும் வீடியோ வெளியிட்ட நடிகை திஷா பதானி

கிக் பாக்ஸிங் செய்யும் வீடியோ வெளியிட்ட நடிகை திஷா பதானி

கொரோனா வைரஸால் உடற்பயிற்சி செய்ய முடியாமல் அவதிப்படுகிறார் பாலிவுட் நடிகை திஷா பதானி. பிஸியான ஷெட்யூலில் கூட ஜிம்மிற்கு செல்வதை வழக்கமாகக் கொண்டிருக்கும் திஷா, கொரோனா வைரால் வீட்டிற்குள்ளேயே முடங்கியுள்ளார். 

 

கிக் பாக்ஸிங் செய்யும் வீடியோ வெளியிட்ட நடிகை திஷா பதானி 

 

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் சினிமா மற்றும் சீரியல் படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், திரைப் பிரபலங்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளார். மேலும் இந்தியா முழுவதும் திரையரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்களும் மூடப்பட்டுள்ளன.

 கிக் பாக்ஸிங் செய்யும் வீடியோ வெளியிட்ட நடிகை திஷா பதானி

 

இதனால் நடிகை திஷா பதானி ஜிம்மிற்கு கூட செல்ல முடியாமல், வீட்டில் செல்லப் பூனைகளுடன் நேரத்தை செலவிட்டு வருகிறார். முன்னதாக தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் செல்லப் பூனையின் புகைப்படங்களை வெளியிட்ட அவர், இவ்வாறு தான் நான் நேரத்தை கழித்து வருகிறேன் என தெரிவித்திருந்தார். தற்போது த்ரோபேக் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் மிக அழகாகவும், எளிமையாகவும் கிக் பாக்ஸிங் செய்யும் திஷா பதானி, மிஸ்ஸிங் ஆக்‌ஷன் என குறிப்பிட்டுள்ளார். 

 

 

Share this story