கொடை கேட்டு வரும் டோலிவுட் படை… தெலுங்கு நடிகர்கள் நடித்த கொரானா விழிப்புணர்வு வீடியோ

கொடை கேட்டு வரும் டோலிவுட் படை… தெலுங்கு நடிகர்கள் நடித்த கொரானா விழிப்புணர்வு வீடியோ

சிரஞ்சீவி, நாகார்ஜுனா, சாய் தேஜ், வருண் தேஜ் ஆகியோர் தற்போது நடந்து வரும் கொரோனா வைரஸ் நெருக்கடிக்கான விழிப்புணர்வு வீடியோவில் நடித்துள்ளனர் 

மெகாஸ்டார் சிரஞ்சீவியின் தலைமையில் தெலுங்கு திரையுலகால் ஒரு கொரோனா  தொண்டு (சி.சி.சி) நிதி அமைக்கப்பட்டுள்ளது .. பல மூத்த டோலிவுட் நட்சத்திரங்களும் இந்த தொண்டு நிறுவனத்தில்  பங்கு பெற்றுள்ளனர் .. இதுவரை, இந்த கொரோனா வைரஸ் அறக்கட்டளை ரூ .5 கோடிக்கு மேல் நன்கொடைகளாக வசூலித்துள்ளது. கொரோனா பரவலை  தடுக்க 21 நாள் ஊரடங்கால்  பாதிக்கப்பட்டுள்ள சினிமா தொழிலில் உள்ள அனைத்து தொழிலாளர்களுக்கும் நிவாரணம் வழங்க தொண்டு நிறுவனத்தில் சேகரிக்கப்பட்ட பணம் பயன்படுத்தப்படும்.

கொடை கேட்டு வரும் டோலிவுட் படை… தெலுங்கு நடிகர்கள் நடித்த கொரானா விழிப்புணர்வு வீடியோ

தொண்டு நிறுவனத்தை ஊக்குவிப்பதற்கும், அதிக நிதியைப் பெறுவதற்கும், ஒரு வீடியோ பாடல் இந்த  தொண்டு உறுப்பினர்களால் வெளியிடப்பட்டது. சிரஞ்சீவி, நாகார்ஜுனா அக்கினேனி, சாய் தேஜ், வருண் தேஜ் உள்ளிட்ட டோலிவுட் நட்சத்திரங்கள் இந்த பாடலில் நடித்து மக்களிடம்  விழிப்புணர்வை பரப்புகிறார்கள். அதில்  வைரஸைத் தவிர்ப்பதற்காக கைகளை  எவ்வாறு கழுவ வேண்டும் என்பதை செய்துகாட்டுகின்றனர் .  பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ  நன்கொடை வழங்குமாறு நட்சத்திரங்கள் மக்களை வற்புறுத்துவதையும் இந்தப் பாடல் காட்டுகிறது.  இசை அமைப்பாளர் கோட்டி பாடலுக்கு  இசையமைத்துள்ளார்.

[video:https://youtu.be/EIjwCA9E1ME]

 

Share this story