கொரோனா: நிதியுதவி அளித்த பாலிவுட் நட்சத்திர தம்பதி

கொரோனா: நிதியுதவி அளித்த பாலிவுட் நட்சத்திர தம்பதி

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் நாடே ஸ்தம்பித்து உள்ளது. இதிலிருந்து மீண்டுவர பலரும் நிதி உதவி அளிக்க வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார். இதனையடுத்து பலரும் நிதி உதவி அளித்து வருகின்றனர். பாலிவுட் நடிகர் அக்‌ஷய்குமார் பிரதமரின் கேர்ஸ் நிதிக்கு ரூ. 25 கோடி நிதியுதவி அளித்தார். அதேபோல் விராட்கோலி, அனுஷ்கா சர்மா தம்பதியும் நிதியுதவி அளித்ததாக அறிவித்தனர். பாஜக எம்.பியும், கிரிக்கெட் வீரருமான கௌதம் கம்பீர் தனது 2 ஆண்டு வருமானத்தை முழுவதுமாக நிவாரணமாக அளிப்பதாக உறுதியளித்தார்.

இந்நிலையில் நட்சத்திர தம்பதிகளான சைப் அலி கானும், கரீனா கபூரும் நிதியுதவி அளிக்கவில்லை என விமர்சனங்கள் எழுந்தன. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தனது குடும்பம் சார்பில், யுனிசெப், கிவ் இந்தியா மற்றும் ஐ.ஏ.எச்.வி ஆகியவற்றிற்கு நிதியுதவி அளித்திருப்பதாக கரீனா கபூர் கான் தனது இன்ஸ்டகிராம் பதிவில் தெரிவித்துள்ளார். இப்போது மற்றொரு பதிவில், பிரதமர் நரேந்திர மோடியின் கேர்ஸ் ஃபண்டுக்கும், மஹாராஷ்டிரா முதலமைச்சரின் நிவாரண நிதிக்கும் நன்கொடை அளித்துள்ளதாக கரீனா உறுதிபடுத்தியுள்ளார்.

 

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Kareena Kapoor Khan (@kareenakapoorkhan) on

 

 

இதேபோல் கரிஷ்மா கபூரும், பி.எம். கேர்ஸ் மற்றும் முதல்வரின் நிவாரண நிதிக்கும் நிதி உதவி வழங்கியதாக தெரிவித்துள்ளார். மேலும், “நாங்கள் நன்கொடை அளித்தோம், தயவுசெய்து நன்கொடை அளிக்கவும் .. ஒரு சிறிய பங்களிப்பு பல உயிர்களுக்கு உதவக்கூடும்” என்று கரிஷ்மா இன்ஸ்டகிராம் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by KK (@therealkarismakapoor) on

 

Share this story