கொரோனா வைரஸுகு செக் வைத்த கத்ரினா கைஃப்!

கொரோனா வைரஸுகு செக் வைத்த கத்ரினா கைஃப்!

கொரோனா வைரஸுக்கு பயந்து மும்பையில் எல்லா ஜிம்களும் மூடப்பட்டு விட்டன. ஏற்கனவே ரோகித் ஷெட்டி இயக்கத்தில் அக்‌ஷய் குமார், கேத்தரினா கைஃப் நடித்த சூர்யவன்ஷி திரைப்படம் திட்டமிட்டபடி மார்ச் 24-ல் வெளியிடுவதை கெடுத்து விட்டது என கொரோனா வைரசின் மேல் கோபத்தில் இருந்தார் கத்ரினா கைஃப். இப்போது தனது பர்சனல் ஃபிட்னசுக்கும் கொரோனாவால் தடை என்றதும் பொங்கி எழுந்து விட்டார்.

[video:https://www.instagram.com/p/B9zMwQJBoz_/?utm_source=ig_web_copy_link]

தன்னை வரகூடாது என்று கதவுகளை சாத்திக்கொண்ட ஜிம்மை தன் வீட்டுக்கு வரவழைத்து விட்டார். ஆம்,இப்போது கேத்தரினா வீட்டுமாடியில் பிராண்ட் நியூ ஜிம் ஏற்படுத்தி கொரோனா வைரஸை ஓட விட்டு விட்டார் கேத்தரினா!.

Share this story