கோடிகளை வழங்கும் நடிகர்கள் -குல தொழிலை பார்க்கும் தொழிலாளர்கள் -கொரானாவின் கோரப்பிடியில் சினிமா தொழில்

கோடிகளை வழங்கும் நடிகர்கள் -குல தொழிலை பார்க்கும் தொழிலாளர்கள் -கொரானாவின் கோரப்பிடியில் சினிமா தொழில்

கொரோனா வைரஸ் தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்காக பல சினிமா பிரபலங்கள் ஒரு குறிப்பிட்ட தொகையை பிரதமர் நிவாரண நிதிக்கு நன்கொடையாக அளித்து தங்கள் ஆதரவை வழங்கி வருகின்றனர். மகேஷ் பாபு, பிரபாஸ், ரஜினிகாந்த், பவன் கல்யாண், அல்லு அர்ஜுன், ராம் சரண் மற்றும் பல நட்சத்திரங்கள் முதல்வர் நிவாரண நிதிகளுக்கு நன்கொடை அளித்துள்ளனர்.

கோடிகளை வழங்கும் நடிகர்கள் -குல தொழிலை பார்க்கும் தொழிலாளர்கள் -கொரானாவின் கோரப்பிடியில் சினிமா தொழில்

இந்நிலையில் கொரோனா வைரஸ் ஏழை சினிமா தொழிலாளர்களின்  வாழ்க்கையை பாதித்துள்ளது. 21 நாள் ஊரடங்கு  காரணமாக, தினசரி கூலி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதை நிரூபிக்கும்  விதமாக கே.ஜி.எஃப் அத்தியாயம் 1 இசைக்கலைஞர் ரவி பஸ்ரூர் தனது தந்தையுடன் சேர்ந்து தினமும் ரூ.35 சம்பாதிப்பதற்காக தனது கிராமத்தில் இரும்படிக்கும் வேலை  செய்கிறார் .

கோவிட் -19 பரவுவதைத் தடுக்க இசையமைப்பு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, அந்த இசைக்கலைஞர் உடுப்பி மாவட்டத்தின் குண்டபுரா தாலுகாவில் உள்ள தனது கிராமத்தில் போய் வேலை செய்ய முடிவு செய்தார். ரவி பேஸ்புக்கில் இந்த  கஷ்டமான காலத்தில் தனது தந்தையுடன் எவ்வாறு வேலை செய்கிறார் என்பது பற்றி ஒரு போட்டோ மூலம் பகிர்ந்து கொண்டார்.

[video:https://www.facebook.com/ravibasrurofficial/posts/3068748773175721]

 

Share this story