‘கோடியில் ஒருவன்’ ரிலீஸ் எப்போது ? சண்டைப்போடும் மூடில் விஜய் ஆண்டனி…

‘கோடியில் ஒருவன்’ ரிலீஸ் எப்போது ?   சண்டைப்போடும் மூடில் விஜய் ஆண்டனி…

விஜய் ஆண்டனி நடிக்கும் கோடியில் ஒருவன் படத்தின் ரிலீஸ் எப்போது என அறிவிக்கப்பட்டுள்ளது.

‘கோடியில் ஒருவன்’ ரிலீஸ் எப்போது ?   சண்டைப்போடும் மூடில் விஜய் ஆண்டனி…

தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமான விஜய் ஆண்டனி தற்போது நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். இவர் நடித்த சலீம், பிச்சைக்காரன், கொலைகாரன் போன்ற படங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றன.  இதையடுத்து அக்னி சிறகுகள், காக்கி, தமிழரசன் போன்ற படங்கள் விஜய் ஆண்டனி கைவசம் உள்ளன.

‘கோடியில் ஒருவன்’ ரிலீஸ் எப்போது ?   சண்டைப்போடும் மூடில் விஜய் ஆண்டனி…

இந்நிலையில் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கோடியில் ஒருவன்’. மெட்ரோ படத்தை இயக்கிய ஆனந்த கிருஷ்ணன் இந்த படத்தை இயக்கியுள்ளார். விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ஆத்மீகா நடித்துள்ளார். என்.எஸ்.உதயகுமார் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு நிவாஸ் கே பிரசன்ன இசையமைத்துள்ளார்.

‘கோடியில் ஒருவன்’ ரிலீஸ் எப்போது ?   சண்டைப்போடும் மூடில் விஜய் ஆண்டனி…

அரசியல் த்ரில்லர் உருவாகியுள்ள இந்த படத்தை செந்தூர் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பில் ராஜா தயாரித்துள்ளார். விஜய் ஆண்டனியின் 14வது படமாக உருவாகியுள்ள இப்படத்தின் ரிலீஸ் எப்போது என அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஏப்ரல் மாதம் கோடை விடுமுறையில் இந்த படம் வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Share this story